துர்நாற்றத்துடன் மஞ்சள் நிற மழை- மிரட்டுது இயற்கை: பீதியில் மக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
ஒரு பக்கம் கடலில் ஏற்பட்டு வரும் திடீர் மாற்றங்கள், கோடை காலத்தில் சூறாவளிக் காற்றுடன் மழை, திருப்பத்தூரில் கிலோகணக்கிலான ஐஸ் கட்டிகளுடன் மழை, ஆங்காங்கே சிறிய நிலநடுக்கங்கள் என தமிழகத்தை இயற்கை மிரட்டி எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று பாண்டிச்சேரியில் துர்நாற்றத்துடன் கூட மஞ்சள் நிற மழைத் துளிகள் விழுந்து பெரும் பீதியைஏற்படுத்திவிட்டது.
துர்நாற்றத்துடன் கூடிய மஞ்சள் நிற மழைத் துளிகள் வானிலிருந்து விழ, முதலில் அதை வித்தியாசமாகப் பார்த்த மக்கள் பின்னர்மிரள ஆரம்பித்துவிட்டனர்.
தொழிற்சாலைகள் மற்றும் இயற்கையாக பூமியில் கிளம்பும் ரசாயனப் புகை மேகங்களில் கலந்து சில நேரங்களில் இவ்வாறுமழைத் துளியாக விழுவது இயல்பு தான் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.













Click it and Unblock the Notifications