பாண்டிச்சேரி சிறையில் விஷ சாராயம்- 3 கைதிகள் சாவு: பிற கைதிகள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

புதுவை மத்திய சிறையில் விஷம் கலந்த திரவத்தை அருந்திய 3 விசாரணைக் கைதிகள் பலியாயினர். இதையடுத்து சிறையில்மற்ற கைதிகள் இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மத்திய சிறையில் பெரியண்ணா என்ற புத்து, ஜெகன் என்ற ஆசை ஜெகன், முரளி என்ற முகம்மது அலி, ரமேஷ் ஆகியோர்விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர்.

4 பேரும் செவ்வாய்க்கிழமை சிறையின் கழிப்பறை அருகே சுருண்டு கிடந்தனர். மயங்கி நிலையில் இருந்த இவர்களைப் சிறைவார்டர்களும், சிறை நிர்வாகிகளும் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர்.

ஆனால், ஜெகனும், பெரியண்ணாவும் சிறை வளாகத்திலேயே உயிழந்தனர். முகம்மது அலி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

ரமேஷ் மட்டும் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் ராகேஷ் சந்திரா விசாரணை நடத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம்அவர் கூறுகையில்,

சிறைக்கு வெளியிலிருந்து கழிப்பறை வழியாக இவர்களுக்கு யாரோ சிலர் சில பாட்டில்களைக் கொடுத்துள்ளனர். அந்தபாட்டில்களில் இருந்த திரவத்தை குடித்த பிறகுதான் நான்கு பேரும் மயங்கி விழுந்துள்ளனர்.

அந்த திரவம் விஷத் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் காரணமாகவே 3 பேரும் உடனடியாக இறந்துள்ளனர். அது விஷம்கலந்த சாராயமா அல்லது வேறு ஏதாவது திரவமா என்பது குறித்து உரிய ஆய்வுக்குப் பின்னரே கூற முடியும்.

இது தற்கொலையாகத் தெரியவில்லை. மது என்று நினைத்துக் குடித்து இறந்துள்ளனர் என்றார்.

இவர்கள் வெளியில் வந்தால் தங்களுக்குப் பிரச்சனை என்று கருதிய எதிர் கோஷ்டியைச் சேர்ந்த யாரோ தான் திட்டமிட்டுஇவ்வாறு விஷம் கலந்த மதுவைத் தந்து இவர்களது கதையை முடித்ததாகத் தெரிகிறது.

அதே நேரத்தில்சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கர் என்ற பயங்கர ரவுடியைக் கொலை செய்யும் நோக்கத்துடன்தான் இந்த விஷதிரவம் உள்ளே அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கைதிகளின் மரணத்தையடுத்து தங்களது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிற கைதிகள்இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்து வரும் அவர்கள் அறைகளுக்குள்கோஷமிட்டவாறு உள்ளனர்.

சிறை நிர்வாகம் மிக மோசமாக செயல்பட்டு வருவதற்கு இந்த சம்பவம் மிகப் பெரிய உதாரணம் என்று மாநில மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் செயலாளர் முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கைதிகள் இறந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் எனமுதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

பாண்டிச்சேரி மத்திய சிறையில் பெண் சுகம் தவிர மற்ற எல்லா வசதிகளும் கைதிகளுக்குக் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

உபயம்: காசு கொடுத்தால் கஞ்சாவில் இருந்து எது வேண்டுமானாலும் வாங்கி வந்துத் தரும் கேடுகெட்ட காக்கிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+