சேலம்: டிஎஸ்பியின் மனைவியை சந்தித்தார் புதிய எஸ்பி
சேலம்:
சேலத்தில் புதிய எஸ்பியாக பதவியேற்ற ஆறுமுகம், இன்று மாயமான டிஎஸ்பி மணிரத்தினத்தின் வீட்டுக்கு சென்று அவரதுமனைவிக்கு ஆறுதல் கூறினார்.
ஓமலூர் டிஎஸ்பி மணிரத்தினம் மாயமான விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்ட எஸ்பியாக இருந்த பொன் மாணிக்கவேல்கடந்த ஏப்ரல் 30ம் தேதி அதிரடியாக மாற்றப்பட்டார். மறுநாளே இரவோடு இரவாக புதிய எஸ்பி ஆறுமுகம் பதவியேற்றார்.
ஆனால் பொன் மாணிக்கவேலோ மாற்றப்பட்ட அன்றே சென்னைக்கு புறப்பட்டு சென்று விட்டார். இதனால் சேலம்மாவட்டத்திற்கு யார் எஸ்பி என்ற குழப்பம் ஏற்பட்டது.
இந் நிலையில் புதிய எஸ்பியாக ஆறுமுகம் இன்று மீண்டும் பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற உடனேயே அவர், மாயமான டிஎஸ்பிமணிரத்தினத்தின் மனைவி தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.
மணிரத்தினம் தொடர்பு கொண்டால் அவரை உடனே திரும்பி வருமாறு கூறவேண்டும் என்றும், அவர் அதே பதவியில் தொடர்ந்துபணிபுரியலாம் என்றும் மணிரத்தினத்தின் மனைவியிடம் எஸ்பி ஆறுமுகம் கூறினார்.












Click it and Unblock the Notifications