என்னா செஞ்சாங்க இந்த 7 கட்சி கூட்டணி?: ஜெ. கேள்விக் கணை
காஞ்சிபுரம்:
திமுக தலைமையிலான 7 கட்சி கூட்டணி தமிழக மக்களின் நலனுக்காக என்ன செய்தது என்பதை மக்களுக்குச் சொல்ல விளக்க வேண்டும்என்று முதல்வர் ஜெயலலிதா கேள்விக் கணை தொடுத்தார்.
காஞ்சிபுரம் தொகுதியில் 2வது நாளாக பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. ஏசி வேனில் சசிகலா சகிதமாக அமர்ந்தபடி பிரச்சாரம் செய்தஜெயலலிதாவின் பேச்சை, கொட்டும் மழையிலும் நூற்றுக்கணக்காவர்கள் நின்று கேட்டனர்.
முதல் நாள் பேசியதையே இரண்டாவது நாள் பிரசாரத்திலும் ஜெயலலிதா பேசினார்.
அவர் கூறியதாவது:
நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் உழைத்து வரும் உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான அரசு படைத்து வரும் சாதனைகள் ஏராளம்.எந்த முற்போக்குத் திட்டத்திற்கும் முட்டுக்கட்டை போடுகின்ற எதிர்க்கட்சிகளின் அடாவடித்தனங்களை எல்லாம் எதிர்கொண்டுபடைக்கப்பட்ட சாதனைகள் இவை.
இன்று எதிர் அணியிலே இருக்கின்ற திமுக தலைமையிலான 7 கட்சிகளின் கூட்டணி தமிழக மக்களுக்கு என்ன செய்து விட்டது? அவர்கள்ஆற்றியிருக்கின்ற சாதனைகள்தான் என்ன?
இந்த 7 கட்சிகளில் சில மத்தியில் ஆளுங்கட்சியாகவும் உள்ளன, முக்கியத் துறைகளையும் தங்களது பொறுப்பிலே கேட்டுப் பெற்றுள்ளன.இந்த ஏழு கட்சிகளும் செய்த ஒரே சாதனை, ஒரே ஆண்டில் 3 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதுதான். ஆனால் நாங்கள் பஸ்கட்டணத்தை உயர்த்தவில்லை.
சட்டசபையில் உட்கார்ந்து முறையாக விவாதங்களில் ஈடுபடுவதில்லை, கேலி செய்து கொண்டும், கிண்டல் பேசிக் கொண்டும்,தேவையில்லாமல் வெளிநடப்புச் செய்து கொண்டும் ஜனநாயகத்தைக் கொலை செய்து கொண்டிருந்தார்கள் இந்த 7 கட்சியினர்.
எனது தலைமையிலான அரசு வீட்டு மின் கட்டணத்தைக் குறைத்தது, சாதி, மத கலவரங்கள் நடக்காத பூமியாக தமிழகத்தை மாற்றியது இந்தஅரசு, 1.11 கோடி பெண்களுக்கு இலவச சேலை தந்தது இந்த அரசு, 1.38 கோடி பேருக்கு குடும்ப அட்டைகள் தந்தது இந்த அரசு, கைத்தறி,நெசவாளர் நலனுக்காக அரசே பிரீமியம் செலுத்தி காப்பீட்டுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது இந்த அரசுதான்.
விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கி வருகிறது இந்த அரசு, தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன பெண்களும் நிலம் வாங்கிபயனடையும் வகையில் 70 கோடி ரூபாய் செலவில் முன்னோடித் திட்டத்தையும் இந்த அரசுதான் கொண்டு வந்தது.
சுனாமியால் பாதிக்ப்பட்ட மக்களுக்கு 1,950 கோடியில் புதிய வீடுகள் உள்பட பல திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.அவர்களது மறுவாழ்வுப் பணிகளுக்காக 1,000 கோடி நிதியை உடனடியாக ஒதுக்கினோம்.
ஆனால் தமிழக மக்களுக்கு எதையும் செய்யாமல் அட்டையைப் போல அமைச்சர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் தமிழகத்தைச்சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களும்.
வளர்ச்சிப் பாதையில் நடைபோட வேண்டும் என்றால் அதிமுகவுக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார் ஜெயலலிதா.
தேனம்பாக்கம், ஓரிகை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பேசினார் ஜெயலலிதா. அவர் போன இடங்களில் எல்லாம் மழைபெய்தது. இருப்பினும் ஏராளமானோர் கூடி நின்று ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டனர்.












Click it and Unblock the Notifications