விடைத்தாள் மோசடி: மேலும் 17 மாணவர்கள் சிக்குகிறார்கள்
சென்னை:
பொறியியல் கல்லூரி விடைத்தாள் திருத்த மோசடியில் மேலும் 17 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிக்கியுள்ளனர். அனைவரும்இன்று மாலைக்குள் கைது செய்யப்படவுள்ளனர்.
சென்னை அருகே உள்ள காட்டாங்கொளத்தூர் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 9 மாணவர்கள், அண்ணாபல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியின் ஊழியர்கள் 3 பேரின் உதவியுடன், விடைத்தாளை திருடி,அதைத் திருத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி குறித்து தீவிரமாக விசாரித்து வரும் போலீஸார் காட்டாங்கொளத்தூல் உள்ள எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி,வண்டலூர் கிரசன்ட் பொறியியல் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த 17 மாணவர்களுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதைக்கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரைணநடத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, பொறியியல் கல்லூரி விடைத்தாள்கள் திருத்தப்பட்டதன் எதிரொலியாக, சென்னை மண்டலத்திற்குட்பட்டதனியார் சுய நிதிக் கல்லூரிகளின் விடைத்தாள்கள் முழுவதையும் மறு மதிப்பீடு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது.
சிபிசிஐடி விசாரிக்க வாசன் கோரிக்கை:
இந் நிலையில் விடைத்தாள் திருத்த மோசடியில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்துசிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொறியியல் தேர்வு விடைத்தாள் மோசடியில் மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர், கைதும்ஆகியுள்ளனர். மேலும் பல லட்சம் அளவுக்கு இதில் பிடிபட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முழுமையான அளவில் விசாரிக்க சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகமே நிர்வகிப்பது என்பது இயலாத காரியம்என்பது இதன்மூலம் நிரூபணமாகிவிட்டது.
எனவே தமிழகத்தை ஐந்து மண்டலமாக பிரித்து, அந்தப் பகுதிகளில் வட்டாரத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை அமைக்கதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
பிஇ மாணவர்களின் அசகாய மோசடி: 7 பேர் கைது: 3 அண்ணா பல்கலை. ஊழியர்களும் கைது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications