For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிஇ மாணவர்களின் அசகாய மோசடி: 7 பேர் கைது: 3 அண்ணா பல்கலை. ஊழியர்களும் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வுக்குரிய விடைத் தாள்களை பணம் கொடுத்து திருத்தி, விடைத் தாள்க்ளை மாற்றியதாகதனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 9 மாணவர்களும், அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் 3 பேரும் போலீஸில்சிக்கியுள்ளனர்.

சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்த விவரம்:

தமிழகத்தில் உள்ள 240 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில்உள்ளன. செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது, மதிப்பீடு செய்வது உள்ளிட்ட அனைத்தப் பணிகளையும் அண்ணாபல்கலைக்கழமே மேற்கொண்டு வருகிறது.

இந் நிலையில், சென்னை மத்திய குற்றப் பிரிவில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெயராமன் புகார் ஒன்றைப் பதிவுசெய்தார். அதில், பொறியியல் கல்லூரி செமஸ்டர் தேர்வு விடைத் தாள்களில் மோசடி நடந்துள்ளதாகவும், அது குறித்துநடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார்.

இதையடுத்து உதவி ஆணையர் அன்புமொழி தலைமையில் ரகசிய விசாரணை நடந்தது.

இதுகுறித்து அன்புமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சென்னை அருகே உள்ள காட்டாங்கொளத்தூரில் உள்ள வள்ளியம்மை பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ்கம்யூனிகேஷன் பாடப் பிரிவைச் சேர்ந்த பல மாணவர்கள் ஏராளமான தாள்களில் அரியர்ஸ் வைத்திருந்தனர். சிலர் 10க்கும்மேற்பட்ட பாடங்களில் அரியர்ஸ் வைத்திருந்தனர்.

இந்த அரியர்ஸ் தேர்வை இவர்கள் எழுதினர். இவர்களது விடைத் தாள்கள் குரோம்பேட்டை எம்.ஐ.டி. வளாகத்தில் உள்ள கல்விமண்டல அலுலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் இந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களான அருண்குமார், சுரேஷ், தாமஸ் ஆகியோருக்குப் பணம்கொடுத்து வெற்று விடைத் தாள்களை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

பின்னர் அந்த வெற்று விடைத் தாள்களில் சரியான விடைகளை எழுதி, அதை பழைய விடைத் தாள்களுக்குப் பதிலாக இணைத்துவைத்து விட்டனர்.

இந்த விடைத் தாள்களை எழுதுவதற்காக ரூ. 3,000 வாடகை கொடுத்து ஒரு வீட்டையும் பிடித்துள்ளனர். அங்கு உட்கார்ந்துதேர்வை எழுதியுள்ளனர். ஒரு பாடத்திற்கு ரூ. 10,000 வீதம் அந்த மாணவர்கள் ஊழியர்களுக்குக் கொடுத்துள்ளனர்.

இந்த பெரும் மோசடியில் ஈடுபட்ட மாணவர்களான சிஜி, ஆர்.கமல், சைதன்யா, ஆர்.கணேஷ், ஹரிபிரசாத், அர்ஜூன், சுரேஷ்,கனி கான் ஆகியோர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடி வேலையை தலைமையேற்று செய்தது சிஜி தான். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர். இவரது வீட்டிலிருந்து 53 விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதே போல எம்.ஐ.டி. ஊழியர் அருண்குமாரின் வீட்டிலிருந்து ரூ. 6 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்ட்டுள்ளது.இந்தப் பணத்தை அவர் பானை ஒன்றில் போட்டு வைத்திருந்தார். மொத்தம் 40 விடைத் தாள்களுக்கு அருண்குமார் பணம்வாங்கியுள்ளார்.

விஜயக்குமார் என்பவர்தான் இந்தப் பணத்தைப் பெற்று அருண்குமாருக்குக் கொடுத்துள்ளார். இந்த இடைத்தரகு வேலை பார்த்தவிஜயக்குமார் யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் அவரையும் பிடிப்போம்.

அதேபோல மற்றொரு ஊழியரான தாமஸ் என்பவர் மாணவர்களிடமிருந்து பெற்ற தொகை ரூ. 1.08 லட்சம் ரூபா." இதை தனதுதங்கை பெயரில் வங்கியில் வைப்பு நிதியாக போட்டுள்ளார். (நல்ல அண்ணன் !). அதையும் மீட்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் மேலும் சிலருக்குத் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. எத்தனை வருடங்களாக இந்த மோசடி நடந்துவருகிறது, வேறு கல்லூரி மாணவர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது என்றார்அன்புமொழி.

இந்த மோசடி வேலையை சில கல்லூரிகளின் நிர்வாகங்ளே கூட செய்வதாகப் பேச்சு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X