இப்போ அரைப் புள்ளி, அடுத்து முழு புள்ளி: ப.சி
காஞ்சிபுரம்:
அதிமுக ஆட்சிக்கு இடைத்தேர்தலில் அரைப் புள்ளியும், பொதுத் தேர்தலில் முற்றுப் புள்ளியும் வைக்க வேண்டும் என்றுகாஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
காஞ்சிபுரம் திமுக வேட்பாளரை ஆதரித்து அவர் பேசுகையில், இடைத்தேர்தல் மட்டும் ஒழுங்காக நடந்தால் திமுக தனதுவெற்றியை இப்போதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.
கடந்த 4 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத பிரச்சினைகளை அடுத்த ஒரு ஆண்டில் தீர்த்து வைக்கப் போவதாக ஜெயலலிதாகூறுவது நம்பத் தகுந்தது அல்ல.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேசுவது தான் முதல் உரிமை. அதற்கு ஆளும் கட்சி பதில் தரலாம். ஆனால் இங்கு நடப்பதோஎதிர்க்கட்சியினர் பேசும்போது குறுக்கிடுவது, மீறி பேசினால் குண்டுக் கட்டாக தூக்கி வெளியே போடுவது இது தான் நடக்கிறது.
காவல் துறையினருக்கு ஒன்றை நான் கூறிக் கொள்கிறேன். அத்துமீறலுக்கு துணை போகாதீர்கள். சட்டத்துக்கும், மக்களுக்கும்,நாட்டுக்கும் மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட ஒருவருக்கு விசுவாசமாக செயல்படக்கூடாது.
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட இந்த இடைத்தேர்தல் மக்களுக்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.அதிமுக ஆட்சிக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் அரைப்புள்ளியும், அடுத்த பொதுத்தேர்தலில் முற்றுப் புள்ளியும் வைக்கவேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications