போலி மருந்து தயாரித்தால் மரண தண்டனை: அன்புமணி
டெல்லி:
போலி மருந்து தயாரிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்துவருவதாக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி கூறினார்.
நாடாளுமன்றத்தில் போலி மருந்து தயாரிப்பு, அழகு சாதனப் பொருட்களில் ரசாயனப் பொருள் கலப்பு மற்றும் குழந்தைகள்உணவுப் பொருளில் கலப்படம் ஆகியவை பற்றிய விவாதம் நடந்தது. அப்போது சுகாதார அமைச்சர் அன்புமணி பதிலளித்துப்பேசுகையில்,
இந்த பரிந்துரைகள் பற்றி மந்திரிசபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் போலி மருந்து தயாரிப்பாளர்களுக்கு மரணதண்டனை விதிக்கலாமா என்றும் மந்திரிசபை பரிசீலித்தது.
ஆனால் இதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் இன்னும் நிறைய பரிந்துரைகள் தேவைப்படும். இது பற்றி சட்டத்துறைஅமைச்சகத்தின் யோசனைகளையும் பெறவுள்ளோம்.
மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தொழிலை முறைப்படுத்த சுதந்திரமான தனி ஆணையம் ஒன்றைஏற்படுத்தவும் மத்திய அரசு யோசித்து வருகிறது.
இவை அனைத்தையும் குறித்து தீவிரமாக விவாதித்து போலி மருந்து உற்பத்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது பற்றிவிரைவில் முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications