பிஇ விடைத்தாள் மோசடி: சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை:
தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரி விடைத்தாள் மோசடி விவகாரம் தொடர்பாக மேலும் 2 மாணவர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்த மோசடியில் மேலும் பல தனியார் கல்லூரிகளுக்குத் தொடர்பிருப்பதால் அது குறித்து முழு விசாரணைநடத்தும் வகையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை காட்டாங்கொளத்தூர் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், பொறியியல் தேர்வுக்கானவிடைத் தாள்களை ஏராளமான பணம் கொடுத்து திருத்திய விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 15 மாணவர்களுக்கு இதில் தொடர்பிருப்பதால் அவர்களும் கைதாகவுள்ளனர். இந்த மோசடியில் கல்லூரிஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏஜென்டாக செயல்பட்ட விஜய்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
இதற்கிடையே இந்த மோசடியில் மேலும் பல கல்லூரிகளுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இந்தவிடைத்தாள் மோசடி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications