அப்பு மனு மீதான விசாரணை 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி அப்பு மற்றும் கதிரவன் தாக்கல் செய்த மனுக்கள் மீதானவிசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வருகிற 13ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளியான அப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,அப்ரூவர் ரவி சுப்ரமணியத்தை குறுக்கு விசாரணை செய்ய எனக்கு போதிய அவகாசம் தரப்படவில்லை. மேலும், எனது தாய்மொழியில் குற்றப்பத்திரிக்கை நகலைக் கோரியும் அது மறுக்கப்பட்டது.
இரு மனுக்களையும் இன்று விசாரித்த நீதிபதி தணிகாச்சலம், விசாரணையை வருகிற 13 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications