அமைச்சர்கள் நாளை மாலை 5 மணிக்குள் வெளியேற உத்தரவு!
காஞ்சிபுரம்:
இடைத் தேர்தல் நடைபெறவுள்ள காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் தங்கி பிரசாரம் செய்து வரும் மத்திய மற்றும்மாநில அமைச்சர்கள் நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை இடைத் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. 14ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.இதையடுத்து வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து இரு தொகுதிகளின் தேர்தல் அதிகாகரிள் செய்தியாளர்களுக்குவிளக்கினர்.
மொத்தம் 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், இரண்டு மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரம் வீதம் மொத்தம் 470 இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஏற்கனவே வந்து சேர்ந்து விட்டன. அவை பரிசோதித்துப் பார்க்கப்பட்டுவிட்டது. பாதுகாப்பாக அவை தற்போது வைக்கப்பட்டுள்ளன. 13ம் தேதி காலை பலத்த பாதுகாப்புடன் இந்த வாக்குப் பதிவுஇயந்திரங்கள் வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு செல்லப்படும்.
14ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும். மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப் பதிவுக்குப்பின்னர் வாலாஜாபாத் சாலையில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டுபாதுகாப்புடன் வைக்கப்படும்.
16ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி, வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேட்பாளர்களின் ஏஜென்டுகளாக பணியாற்ற முடியும். இதற்கானசான்றுகளை ஏஜென்டுகள் காட்ட வேண்டும்.
வாக்குப் பதிவு தினத்தன்று வன்முறையில் ஈடுபடுபவர்கள் சுட்டுத் தள்ளப்படுவார்கள். போலீஸாருடன், துணை ராணுவத்தினரும்தீவிர பாதுகாப்பில் ஈடுபடுவர்.
வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தொகுதியிலிருந்து வெளியேறி விடவேண்டும். எனவே வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் மத்திய, மாநில அமைச்சர்கள், வெளியாட்கள் தொகுதியிலிருந்துவெளியேறி விட வேண்டும் என்றார் அன்பழகன்.
இதேபோல, கும்மிடிப்பூண்டியிலும் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. தொகுதியில் தங்கியிருக்கும்அமைச்சர்கள் வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் வெளியேற தொகுதி தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
வேட்பாளர்கள் முன்னிலையில் இரு தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்களும் பரிசோதித்து பார்க்கப்பட்டன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications