பிரசாரத்தை முடித்தார் ஜெயலலிதா
கும்மிடிப்பூண்டி:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் 6 நாட்கள் மின்னல் வேகப் பிரசாரத்தை மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதாநேற்றுடன் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.
கடந்த 3ம் தேதி மாலை தனது பிரசாரத்தை காஞ்சிபுரம் தொகுதியிலிருந்து தொடங்கினார் ஜெயலலிதா. தொடர்ந்து 2 நாட்கள்காஞ்சிபுரம் தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில்கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா.
நேற்று மாலை 4.20 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பிய ஜெயலலிதா, கும்மிடிப்பூண்டிக்கு உட்பட்ட புதுவாயல் என்றஇடத்தில் பிரசாரத்தை தொடங்கி, இரவு 10.25 மணியளவில் கும்மிடிப்பூண்டியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
நேற்றைய பிரசாரத்தின் போது இதுவரை இல்லாத அளவுக்கு பெருந்திரளான மக்கள் ஜெயலலிதாவைப் பார்க்கவும், அவரதுபேச்சைக் கேட்கவும் திரண்டிருந்தனர். மாதர்பாக்கம் என்ற இடத்தில் ஏராளமான முஸ்லீம்களும், தெலுங்கு பேசுவோரும்திரண்டிருந்தனர்.
அவர்களிடையே தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்தார் ஜெயலலிதா. அதேபோல பாதிவேடு என்ற பகுதியிலும் தெலுங்கில் பேசிஓட்டு கேட்டார் ஜெயலலிதா.
கும்மிடிப்பூண்டி நகரில் ஜெயலலிதாவை வரவேற்று அதிமுகவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். மின் விளக்குஅலங்காரம், வரவேற்பு தோரணங்கள், அலங்கார வளைவுகள் என தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கடந்த 6 நாள் பிரசாரத்திலும் ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்க பெருவாரியான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.
6 நாள் பிரசாரத்திலும் எழுதி வைத்ததைப் படித்து வந்த ஜெயலலிதா, சில நேரங்களில் மட்டும் அவராகவே பேசினார். எழுதிவைத்ததைப் படித்த காரணத்தால், அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான பேச்சையே வாக்காளர்கள் கேட்க நேர்ந்தது.
பெட்ரோல் விலை உயர்வு, மத்தியில் 12 அமைச்சர்கள் இருந்தும் தமிழக நலன் குறித்து கவலைப்படவில்லை, 7 கட்சிக்கூட்டணியால் தமிழக நலனுக்கு ஒரு வாய்ப்பும் இல்லை, தமிழக அரசின் சாதனைகள் ஆகியவற்றை மையமாக வைத்துஜெயலலிதாவின் பேச்சும், பிரசாரமும் அமைந்தது.
ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப் பயணத்தை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தான் திட்டமிட்டு வழி நடத்தினார்.அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், அனிதா ராதாகிருஷ்ணன், பாண்டுரங்கன், சி.வி.சண்முகம், பி.சி.ராமசாமி,இன்பத் தமிழன், நைனார் நாகேந்திரன், சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான அமைச்சர்களும் தேர்தல் பிரசாரத்தில்பங்கெடுத்தனர்.
ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்க காஞ்சிபுரத்தை விட கும்மிடிப்பூண்டியில் தான் அதிக அளவில் மக்கள் திரண்டிருந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications