இடைத்தேர்தல்: நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

இடைத்தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் நாளையுடன் பிரசாரம் முடிவடைகிறது. இதனால்தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் 14ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 2 வாரங்களாகஇந்த இரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ், மதிமுக உட்பட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் முகாமிட்டு அனல்கக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைவர்கள் மட்டுமல்லாமல் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர், நடிகைகளும் தீவிர பிரசாரத்தில்ஈடுபட்டுள்ளனர். அதிமுகவுக்கு ஆதரவாக மாநில அமைச்சர்களும், திமுகவுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்களும் பிரசாரம்செய்து வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதா இரு தொகுதிகளிலும் முதற்கட்ட பிரசாரத்தை முடித்து விட்டார். இப்போது அவர் இறுதிக் கட்ட பிரசாரத்தில்தீவிரமாக ஈடுபட்டுள்ளார். காஞ்சிபுரம் தொகுதியில் அதிக அளவு நெசவாளர்கள் இருப்பதால் தனியார் நெசவாளர்களுக்கு கூலிஉயர்வு பெற்றுத் தருவோம் என்பன உட்பட பல வாக்குறுதிகளை ஜெயலலிதா அள்ளி வீசி வருகிறார்.

இது தவிர வழக்கம் போல அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை நன்றாக "கவனித்தும் வருகின்றனர்.பெண்களுக்கு சேலை, இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட், பந்து என பல்வேறு அன்பளிப்புகளால் வாக்காளர்களை கவர்ந்துவருகின்றனர்.

கருணாநிதி பிரசாரம்:

திமுக தலைவர் கருணாநிதி நேற்று தனது பிரசாரத்தை தொடங்கினார். கருணாநிதி முழுவீச்சில் பிரசாரத்தில் ஈடுபடாவிட்டாலும்,காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்து கொண்டு பேசியதுதிமுகவினருக்கு கூடுதல் தெம்பை அளித்துள்ளது.

மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களாக இரு தொகுதிகளிலும் முகாமிட்டு இடைவிடாமல் பிரசாரம் செய்து வருகிறார். திமுக மற்றும்அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் மத்திய அரசின் சாதனைகளும், தமிழக அரசை குற்றம் சாட்டியும் பிரசாரம் செய்துவருகின்றனர்.

இரு தொகுதிகளிலும் 14ம் தேதி தேர்தல் நடைபெறுவதால் நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அனைத்துக் கட்சித்தலைவர்களும் கடைசிக் கட்ட பிரசாரத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் தங்களது பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஓட்டுச்சாவடிகளில் வைக்கப்படும்வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கும் பணி நேற்று நடைபெற்றது.

தேர்தலுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. பதட்டம் அதிகமான பகுதிகளில் துணைராணுவத்தினர் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டனர்.

14ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடையும். வாக்குப்பதிவுமுடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கலைக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்படும்.

அங்கு தனி அறையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும். 16ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.அன்று பிற்பகலுக்குள் முடிவுகள் தெரிந்து விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+