ஓய்ந்தது பிரச்சாரம்: வாக்கு சாவடியில் மத்திய படை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம் & கும்மிடிப்பூண்டி::

இடைத்தேர்தல் நடைபெறும் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது.தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லாததால், தேர்தல் பாதுகாப்புக்காக மேலும் 8 கம்பெனி துணை ராணுவத்தை வரவழைக்கதேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மத்திய போலீஸ் படையினர் நிறுத்தப்படவுள்ளனர். வன்முறையில் ஈடுபவர்களை கண்டதும்சுட இவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் 14ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுகசார்பில் மைதிலி திருநாவுக்கரசு, திமுக சார்பில், பி.எம்.குமார் ஆகியோர் உள்பட 20 பேரும், கும்மிடிப்பூண்டியில் அதிமுக சார்பில்விஜயக்குமார், திமுக சார்பில் வெங்கடாசலபதி ஆகியோர் உள்ளிட்ட 16 பேரும் களத்தில் உள்ளனர்.

இதற்காக கடந்த 2 வாரங்களாக இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ், மதிமுக உட்பட முக்கியகட்சிகளின் தலைவர்கள் முகாமிட்டு அனல் கக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்,

அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா 6 நாட்கள் இரு தொகுதியிலும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.அமைச்சர்கள் தொகுதியிலேயே முகாமிட்டு தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.

திமுக சார்பில் முன்னணித் தலைவர்கள் தொகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். கட்சியின் தலைவர்கருணாநிதி இரு தொகுதிகளிலும் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கூட்டணிக் கட்சிகளின்தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டனர்.

தலைவர்கள் மட்டுமல்லாமல் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு ஆதரவாக நடிகர், நடிகைகளும் தீவிர பிரசாரத்தில்ஈடுபட்டனர். அதிமுகவுக்கு ஆதரவாக மாநில அமைச்சர்களும், திமுகவுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்களும் பிரசாரம்செய்தனர்.

இது தவிர வழக்கம் போல அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை நன்றாக "கவனித்தும் வருகின்றனர்.பெண்களுக்கு சேலை, இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட், பந்து என பல்வேறு அன்பளிப்புகளால் வாக்காளர்களை கவர்ந்துவந்தனர்.

கோடை வெயிலை மிஞ்சும் வகையில் படு சூடாக நடந்து வந்த இந்தத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன்முடிவடைந்தது. அதன் பின்னர் எந்த ரூபத்திலும் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என்றாலும் கட்சியினர் வீடு வீடாக சென்றுவாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.

ஆனால், நாளை எந்த வகையான பிரச்சாரமும் நடத்த அனுமதிக்கப்படாது.

இந் நிலையில் கல்யாண மண்டபம், வீடு, சத்திரம், லாட்ஜ் என பல விதமான இருப்பிடங்களைப் பிடித்துத் தங்கியிருந்தவெளியூரைச் சேர்ந்த அதிமுக, திமுகவினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதிமுக அமைச்சர்கள், வாரியத்தலைவர்கள் கூட ஊருக்குள் இருக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

14ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளன.

8 கம்பெனி துணை ராணுவம்:

இரு தொகுதிகளிலும் 8 கம்பெனி மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்குச்சாவடிகளில், வாக்குப் பதிவு அதிகாரிகளாக மத்திய அரசு ஊழியர்களே செயல்படவுள்ளனர். கும்மிடிப்பூண்டியில் பெரம்பலூர்ரயில் பெட்டித் தொழிற்சாலை ஊழியர்கள் தேர்தல் அதிகாரிகளாக இருப்பர்.

ஓட்டுச் சாவடிகளில் வைக்கப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கும் பணி நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

தேர்தலுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. பதட்டம் அதிகமான பகுதிகளில் துணைராணுவத்தினர் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டனர்.

இந் நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்களையும், குண்டர்களையும் களமிறக்கிவன்முறையை தூண்டவும், ஓட்டுச் சாவடிகளை கைப்பற்றவு திட்டமிட்டிருப்பாதகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டியுள்ளன.

இதனால் அனைத்து வாக்குச் சாவடியிலும் வாக்குப் பதிவு முடியும் வரை வீடியோ படமெடுக்கப்படவுள்ளது. வாக்குப்பதிவுமுடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கலைக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்படும்.

அங்கு தனி அறையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும். 16ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.அன்று பிற்பகலுக்குள் முடிவுகள் தெரிந்து விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+