கீரிப்பட்டி பஞ். தலைவர் ராஜினாமா ஏற்கப்படவில்லை: அரசு
சென்னை:
கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட் அழகுமலையின் ராஜினாமாக் கடிதம் இன்னும் ஏற்கப்படவில்லை என்றுசென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தலித் பஞ்சாயத்துகளான பாப்பாபட்டி, கீரிட்டப்பட்டி, நாட்டார்மங்களம் உள்ளிட்ட 4 பஞ்சாயத்துகளிலும் தலித்களைதலைவராக ஏற்க மறுத்து வருகின்றனர் முக்குலத்தோர்.
இந் நிலையில் கீரிப்பட்டி பஞ்சாயத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் முக்குலத்தோரால் நிறுத்தப்பட்ட அழகுமலை என்பவர்வெற்றி பெற்றவுடன், முக்குலத்தோரின் உத்தரவுப்படி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்கக் கூடாது என்று கோரி அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த விடுதலைச்சிறுத்தைகள் வேட்பாளர் பூங்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை கீரிப்பட்டியைச் சேர்ந்தமுக்குலத்தோரும் அரசும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
பூங்கொடி தாக்கல் செய்த மனுவில், 1994ம் ஆண்டு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, பஞ்சாயத்துத் தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டவர் தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாது. மேலும், மாவட்ட ஆட்சித் தலைவடரிம் தான் ராஜினாமாகடிதத்தை கொடுத்திருக்க வேண்டும்.
விதிமுறையை கடைப்பிடிக்காமல் இந்த ராஜினாமாக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதை ஏற்கக் கூடாது என்றுமாவட்ட ஆட்சித் தலைவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் பூங்கொடி கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி குலசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு வழக்கறிஞர் சோமையாஜுலுஆஜராகி, விதிமுறைப்படி அழகுமலையின் ராஜினாமா கடிதம் வழங்கப்படவில்லை. எனவே அதை ஏற்க முடியாத நிலையில்மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளார்.
இதுவரை அந்த ராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு கோடை விடுமுறைக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிஉத்தரவிட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications