மகனை கடலுக்கு காவு கொடுத்த தாய்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சாமியாரின் பேச்சைக் கேட்டு, மன நலம் குன்றிய 2 வயது மகனை, அவனது தாயார் கடலில் கழுத்தளவுக்கு நிற்க வைத்தபோது, அந்தசிறுவன் அலையில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தான்.
அப்போது சில மந்திரங்களைக் கூறி கடல் நீரில் கழுத்து வரைக்கும் குழந்தையை நிற்க வைக்குமாறு கூறியுள்ளான் அந்த சாமியார். அவன்சொன்னதை நம்பிய அஞ்சலி மெரீனா கடற்கரைக்கு மகனைக் கூட்டிச் சென்று கடல் நீரில் நிற்க வைத்துள்ளார்.
நடுங்கிபடியே விவரம் புரியாமல் கடலுக்குள் நின்றிருந்த அபிஷேக்கை பெரிய அலை கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டது.
தனது கண் முன்னாலேயே தனது மகனை அலை இழுத்துச் சென்றதைப் பார்த்து அதிர்ந்த அஞ்சலி கதறி அழுதார். இருப்பினும் அவரதுமகனை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. குழந்தையின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications