For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள தொழிலதிபரிடம் ரூ. 1.25 கோடி மொட்டை போட்ட ஆதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:


ஆதியுடன் அபுபக்கர் (தொப்பி அணிந்தவர்)

ஆதிகேசவன் தன்னிடம் ரூ. 1.25 கோடி மோசடி செய்து விட்டதாக கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் அபுபக்கர் என்பவர்போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

மோசடி மன்னன் ஆதிகேசவனின் லீலைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. இந் நிலையில் கேரளமாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அபுபக்கர் என்பவர், தாராபுரம் பாமக எம்.எல்.ஏ சிவகாமி வின்சென்ட்டுடன் சென்னை மாநகரகாவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் கொடுத்தார்.

அதில், கடந்த 2002ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆரம்பிப்பதற்காக எனக்கு கேரள மாநில கூட்டுறவுவங்கி ரூ. 25 கோடியை கடனாக அனுமதித்தது. இதற்கு 15 சதவீத வட்டியாகவும் வங்கி நிர்ணயித்தது.

இதைத் தெரிந்து கொண்ட ஆதிகேசவன் என்னை அணுகினார். 7 சதவீத வட்டியில் கடன் வாங்கித் தருவதாக அவர் கூறினார்.வட்டி குறைவாக இருக்கிறதே என்று சந்தோஷமடைந்த நான், அதற்கு ஒத்துக் கொண்டேன்.

இதையடுத்து எனது மருத்துவக் கல்லூரி திட்டம் தொடர்பாக விரிவாகக் கேட்டுக் கொண்டார் ஆதிகேசவன். பின்னர் "ஆய்வுக்குப்"பிறகு எனக்கு லோன் கிடைத்து விட்டது என்றும், அதற்குரிய கமிஷன் தொகையான ரூ. 1.25 கோடி பணத்தைக் கொடுத்தால்உடனடியாக கடன் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆதிகேசவன் கூறினார்.

10 ஆண்டுகளில் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் என்னிடம் ஆதிகேசவன் கூறினார். அவரதுநிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்ட நான், கடந்த 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் பல தவணையாக ரூ. 1.25 கோடியை கமிஷன்பணமாக ஆதிகேசவனிடம் கொடுத்தேன்.

இதற்காக ஆதிகேசவனை பல முறை கேரளாவுக்கு விமானத்தில் அழைத்துச் சென்று சொகுசு ஹோட்டல்களில் தங்க வைத்தேன்.இதைத் தொடர்ந்து 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம், ரூ. 25 கோடிக்கான காசோலையை ஆதிகேசவன் என்னிடம் கொடுத்தார்.

ஆதிகேசவன் கல்வி மற்றும் நல அறக்கட்டளை என்ற பெயரில் இந்த காசோலை கொடுக்கப்பட்டது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாகாசோலை அது.

காசோலையைக் கொடுத்த ஆதிகேசவன், அதை வங்கியில் போட வேண்டாம் என்றும், தான் சொல்லும்போது போட்டால் போதும்என்றும் கூறினார். பின்னர் சில நாட்கள் கழித்து அந்த காசோலையை திரும்பப் பெற்றுக் கொண்ட அவர், எனது பெயரில் தானேகணக்கு ஆரம்பித்து அதில் பணத்தைப் போடுவதாகத் தெரிவித்தார்.

சில நாட்கள் கழித்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையை நான் அணுகி விசாரித்தபோது வெறும் 5,000 ரூபாய் மட்டுமே கணக்கில்போடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிர்ந்து போன நான் ஆதிகேசவனை அணுகியபோது, கொலை செய்து விடுவதாக கூறிமிரட்டி என்னை விரட்டி விட்டு விட்டார்.

பல்வேறு இடங்களில் கடன் வாங்கித்தான் ஆகிகேசவனிடம் நான் பணத்தைக் கொடுத்திருந்தேன். இந் நிலையில் கடன்கொடுத்தவர்கள் என்னை வந்து நெருக்கியதால் நான் பயந்து போய் தலைமறைவாக திருச்சூரிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டேன்.

இந்தப் பிரச்சினையால் அதிர்ந்து போன எனது மனைவிக்கு புத்தி பேதலித்து விட்டது. அவர் தற்போது ஏர்வாடி மன நலகாப்பகத்தில் தங்கியுள்ளார். இப்போது ஆதிகேசவன் போலீஸில் சிக்கியுள்ளது தெரிந்து புகார் கொடுத்துள்ளேன் என்றார்அபுபக்கர்.

அபுபக்கருடன் வந்திருந்த சிவகாசி வின்சென்ட் எம்.எல்.ஏ. கூறுகையில், அபுபக்கரின் உறவினரான ரிஸ்தி பேகம் எனது தோழிஆவார். அபுபக்கரின் நிலையை என்னிடம் தெரிவித்த பேகம் இதுதொடர்பாக உதவுமாறு கேட்டுக் கொண்டார். அதனால்தான்அபுபக்கருடன் ஆணையரை சந்திக்க வந்தேன்.

இந்த விஷயத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு நானும் ஆணையரிடம் ஒரு மனு கொடுத்தேன் என்றார் சிவகாமிவின்சென்ட்.

ஆதியின் மகன் எஸ்கேப்:

இந் நிலையில் ஆதி கேசவனின் மகன் சாரதி தலைமறைவாக இருந்து வருகிறார். அவரைக் கைது செய்ய தனிப்படைஅமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

அதே போல, கேரள மாநிலத்தில் ஆதிகேசவனின் ஏஜென்ட்டாக இருந்து நூற்றுக்கணக்கானவர்களிடம் பல கோடி ரூபாய்களைஆதிகேசவன் மோசடி செய்ய உதவியாக இருந்த ஜோஷ்வா என்பவரையும் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.ஜோஷ்வாவைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸார் திருவனந்தபுரம் செல்கிறது.

பண்ணை வீட்டில் சோதனை:

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஆதிகேசவனின் பண்ணை வீட்டையும் போலீஸார் இன்று சோதனை செய்தனர்.அங்கிருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பண்ணை வீட்டின் மதிப்பீடு செய்யும் பணியில் போலீஸார்ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X