For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏ.கே. மூர்த்தி, திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் கைது- சேகர்பாபுவை விரட்டியடித்த திமுகவினர்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம் & கும்மிடிப்பூண்டி:

காஞ்சிபுரம் தொகுதிக்குள் அத்துமீறி நுழைந்தாக செங்கல்பட்டு பாமக எம்பியான ஏ.கே.மூர்த்தி, பாமக எம்எல்ஏ ஆறுமுகம்,கும்மிடிப்பூண்டிக்குள் அத்துமீறி நுழைந்ததாக திமுக திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் சிவாஜி, கரூர் மாவட்ட திமுக செயலாளர்வாசுகி முருகேசன், காஞ்சிபுரத்துக்குள் அத்துமீறி நுழைந்த அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், குடிசை மாற்று வாரியத்தலைவர் பாலகங்கா ஆகியோரை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டியில் கள்ள ஓட்டுக்களை ஏற்பாடு செய்ய வந்த அதிமுக எம்.எல்.ஏவும் அடிதடி புள்ளியுமான சேகர் பாபுவைதிமுகவினர் விரட்டி, விரட்டி தாக்க முயன்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நடக்கும் காஞ்சி, கும்மிடிப்பூண்டியில் அரசியல் பணிக்காக எந்த வெளிநபர்களும் நூழையக்கூடாது என தடை போடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட மாகரல், காலிமேடு ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுப் போடமுயன்றவர்களை போலீஸார் துரத்திப் பிடித்தனர். இதேபோல டிராக்டர் ஒன்றில் கள்ள ஓட்டுப் போட கூட்டி வரப்பட்டவர்களைபோலீஸார் துரத்தியடித்தனர்.

இந் நிலையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாமகவினருடன் காஞ்சிபுரம் பகுதியில் மூர்த்தி தேர்தல் வேலையில் ஈடுபட்டார்.பிள்ளையார்பாளையம் பகுதியில் ஒரு சத்திரத்தில் தனது ஆதரவாளர்களோடு தங்கியிருந்த மூர்த்தியை கூடுதல் எஸ்.பி.பவானீஸ்வரி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

அவருடன் திருக்கச்சூர் பாமக எம்எல்ஏ ஆறுமுகம் மற்றும் பாமகவினரையும் கைது செய்தனர். மூர்த்தியின் அவரது காரும்பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான இவர்கள் காஞ்சி ஆர்ய வைஸ்ய சமாஜ கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருமண மண்டபத்தைவெளியில் இருந்து பூட்டிவிட்ட போலீசார் வெளியே காவலுக்கு நின்றுள்ளனர்.

இந் நிலையில் மூர்த்தியுடன் செல்போனில் பேசியபோது,

நான் தேர்தல் வேலைக்கு வரவில்லை. சாமி கும்பிட கோவிலுக்கு வந்தேன். ஆனால் பொய்யான காரணம் சொல்லி கைதுசெய்துவிட்டார்கள். இது குறித்து கலெக்டர், எஸ்பியுடனும் பேசினேன். ஆனால், ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.இதனால் மண்டபத்துக்குள் அடைபட்டிருக்கிறேன் என்றார் சிரிப்புடன்.

திமுக மா.செக்களும் கைது:

இதேபோல, கரூர் திமுக செயலாளர் வாசுகி முருகேசன், திமுகவினருடன் வாகனத்தில் வந்தபோது அவர்களை போலீஸார்மடக்கிப் பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பினர். இருப்பினும் போலீஸார் ஜீப்பில் துரத்தினர்.செவிலிமேடு என்ற இடத்தில் வைத்து திமுகவினர் மடக்கப்பட்டனர். பின்னர் வாசுகி முருகேசன் உள்பட 17 திமுகவினரைபோலீஸார் கைது செய்தனர்.

அதே போல கும்மிடிப்பூண்டி தொகுதிக்குள் கார்களில் திமுகவினருடன் நுழைந்த திருவள்ளூர் மாவட்ட திமுக செயலாளர்சிவாஜியையும் பிற திமுகவினரையும் தேர்தல் சிறப்புப் பார்வையாளர் கே.ஜே.ராவ் தடுத்து நிறுத்தி கைதுசெய்ய உத்தரவிட்டார்.இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து வெங்கல் காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்றனர்.

கவரப்பேட்டை பகுதியில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. விஜயன் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி அவர்களைக்கைது செய்தனர்.

ராவிடம் மாட்டிய திமுக சுயேச்சைகள்:

கும்மிடிப்பூண்டியில் தேர்தல் சிறப்புப் பார்வையாளர் கே.ஜே.ராவ் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது சுயேச்சை வேட்பாளர் லோகநாதன் என்பவரதுகாரை மடக்கிப் பிடித்தார். தான் வாக்குச் சாவடிகளைப் பார்வையிடப் போவதாக லோகநாதன் கூறினார்.

இருப்பினும் சந்தேகம் நீங்காத ராவ், கார் டிக்கியைத் திறந்து பார்த்தபோது, அதில், ஏராளமான திமுக கொடிகளும், ஆயுதங்களும் இருப்பதைப் பார்த்துஅதிர்ந்த ராவ், காரைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதே போல இன்னொரு சுயேச்சையும் திமுக கொடிகளுடன் பிடிபட்டார்.

வாக்குச் சாவடிகளில் போலீஸ் ஆதரவுடன் அதிமுகவினர் அராஜகம் செய்வார்கள் என நினைத்த திமுக அதைச் சமாளிக்க நிறைய பூத் ஏஜெண்டுகள்இருந்தால நல்லது என்று கருதி பல சுயேச்சைகளை தேர்தலில் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சுயேச்சைகளின் பூத் ஏஜெண்டுகளாக திமுகவினரே வந்துநின்றனர்.

அப்படியாப்பட்ட ஒரு திமுக சுயேச்சை தான் இன்று ராவிடம் மாட்டினார்.

இதே போன்ற ஒரு அதிமுக சுயேச்சையும் ராவிடம் மாட்டினார். சுயேச்சைகள் கட்சி சார்பாக போட்டியிடுவது பெரும் விதிமீறல் என தெரிவித்த ராவ்,இந்த மூவர் மீதும் வழக்குத் தொடர உத்தரவிட்டார்.

அதிமுக எம்எல்ஏ, பாலகங்கா கைது:

இந் நிலையில் காஞ்சிபுரத்திற்குள் அத்துமீறி காரில் வந்த அதிமுக எம்.எல்.ஏவும் முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியனின் மகனுமான மனோஜ்பாண்டியன், சென்னையில் அடிதடிக்குப் பேர் போன அதிமுக புள்ளியான குடிசை மாற்று வாரியத் தலைவர் பாலகங்கா ஆகியோரையும் போலீஸார் கைது செய்துசிவகாஞ்சி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

கராத்தே வரவில்லை.. கார் வந்தது:

சென்னை அதிமுக அடிதடி குரூப்பின் இன்னொரு முக்கியப் புள்ளியான சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனுக்குச் சொந்தமான குவாலிஸ்காரில் வந்தவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

ஆனால், கராத்தேயும் வந்ததாகவும் அவரை விட்டுவிட்டு காரை மட்டும் போலீஸ் மடக்கியதாகவும் திமுகவினர் புகார் கூறியது.

கள்ள ஓட்டுப் போடுவதற்காக 6 ஆட்டோக்களில் வந்த அதிமுகவினரை போலீஸார் விரட்டியடித்தனர்.

அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன, டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சேகர் பாபுவை விரட்டிய திமுகவினர்:

கும்மிடிப்பூண்டிக்கு உட்பட்ட புதுவாயல் பகுதியில் கள்ள ஓட்டுகளுக்கு ஏற்பாடு செய்ய வந்த சென்னை அதிமுக எம்.எல்.ஏ. சேகர் பாபுவை திமுகவினர்விரட்டினர். அவரும் அதிமுகவினரும் தப்பியோட திமுகவினர் தொடர்ந்து விரட்ட அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராவ் வந்தார்.. ஓடினர் அதிமுகவினர்:

கும்மிடிபூண்டியில் கவரபேட்டை பகுதியில் அதிமுக அலுவலகம் ஒன்றில் 15 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை நெருங்கிய ராவ், யார் நீங்கள்என்று தான் கேட்டார்.

அடுத்த நொடியே அனைவரும் சாப்பாட்டை அப்படியே போட்டுவிட்டு பின்புறம் இருந்த 12 அடி உயர் சுவற்றை ஓடிப் போய் தாண்டி தப்பியோடினர்.

இதை பார்த்த ராவ் அருகில் தன்னுடன் வந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி ராஜைக் கூப்பிட்டு, இங்க என்ன நடக்குது.. போலீஸ் இதையெல்லாம்கவனிக்காதா என்று குடைந்தார். தப்பியோடிய அனைவரையும் கைது செய்யவும் உத்தரவிட்டார்.

மேலும் அந்த கட்சி அலுவலகத்தில் இருந்த 2 கார்கள், ஒரு பைக் ஆகியவற்றைக் காட்டி அதை ஸ்டேசனுக்கு கொண்டு போங்க.. தானே வருவாங்கஎன்றார்.

இதுவரை கும்மிடிபூண்டியில் அனுமதியின்றி தங்கிய வெளியூர் நபர்கள் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிமுகவினர் 45 பேர். திமுகவினர் 34 பேர்.தப்பியோடிய அதிமுகவினர் 15 பேர்.

பிடிபட்ட அதிமுக மகளிரணி:

கும்மிடிப்பூண்டியில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்ட அதிமுக மகளிரணியினர் 33 பேரை தேர்தல் அதிகாரிகள் பிடித்து தொகுதியை விட்டு வெளியேற்றினர். அதேபோல போலி ஆவணங்களுடன் கள்ள ஓட்டு போட வந்த 3 பேரை திமுகவினர் மடக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X