அடித்து ஆடும் லீமா ரோஸ் மார்டின்.. முறிக்க முயற்சி பண்ணலையாம்.. இணைப்பதற்காக பாடுபடுவதாக பேட்டி
சென்னை: தமிழக அரசியலில் கூட்டணி விவகாரம் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பரபரப்பு நீடித்து வரும் நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் மார்டின், "மக்கள் முன்னேற்றத்திற்காகவே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது; பிளவை ஏற்படுத்த அல்ல" என்று தெரிவித்தார்.
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், கட்சிகள் இடையேயான விமர்சனங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கூட்டணி அரசியல் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் முன்வைத்து வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தொகுதியின் வளர்ச்சிக்காகவும் தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் என்பது மக்கள் நலனை மையமாகக் கொண்டு இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதற்காக முதல்வர் விஜய்க்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டதும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முக்கிய திட்டமாக உள்ளது. இதையும் நாங்கள் வரவேற்கிறோம். மேலும், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
'உங்களால்தான் அரசியலில் பிளவு ஏற்பட்டுள்ளது' என்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கையில், நாங்கள் யாரையும் பிரிக்க வரவில்லை. அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில்தான் செயல்பட்டு வருகிறோம்," என்றார்.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications