ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: மே 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மே 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று ஜெயலலிதா, சசிகலா உட்பட குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் ஆஜராக வேண்டும் என்று கடந்த முறை நீதிபதிபச்சாப்பூரே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல இன்று முதல் இந்த வழக்கு விசாரணை தினந்தோறும் நடக்கும் என்றும்பச்சேபுரே கூறியுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு மற்றும் தினகரன் லண்டனில்ஓட்டல் வாங்கிய வழக்கு ஆகியவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கையும், ஓட்டல் வாங்கிய வழக்கையும் சேர்த்தே நடத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதும் விசாரணை நடக்கிறது.
இன்று நீதிமன்றம் கூடியதும் சொத்துக் குவிப்பு வழக்கையும், ஓட்டல் வழக்கையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்றுஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் துள்சி வாதாடினார். அவர் வாதிடுகையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தான் லண்டன் ஓட்டல்வழக்கும் வருகிறது. எனவே இதற்கு தனியாக 2வது குற்றப் பத்திரிகை வழங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.
குற்றம் செய்திருப்பதற்கான முகாந்திரம் இருந்தால் மட்டுமே வழக்கை நடத்த வேண்டும்.மேலும் இந்த வழக்கில் ஊழல் தடுப்புசட்டம் 13 (1) இ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவானால்மட்டுமே இந்தப் பிரிவின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
இதன் பிறகு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி வாதிடுகையில், வழக்கில் 2வதாக வழங்கப்பட்ட குற்றப் பத்திரிகையைமுழுவதுமாக படித்துப் பார்க்க 3 வார கால அவகாசம் தேவை. எனவே 3 வாரத்திற்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்என்றார்.
இதற்கு நீதிபதி பச்சாப்பூரே கடும் கண்டனம் தெரிவித்தார். இப்படி அடிக்கடி எதற்கெடுத்தாலும் தவணை கேட்பது நல்லதில்லை.கடந்த முறையே குற்றப் பத்திரிகையின் நகல்களை வழங்குவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதனால் அவை அனைத்தும் உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும். எனவே நீங்கள் கேட்பது போல 3 வாரத்திற்குவிசாரணையை தள்ளி வைக்க முடியாது என்றார்.
தினமும் விசாரணை:
-அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் துள்சி, தொடக்கத்திலேயே இவ்வாறு மோதல் போக்குடன் நடப்பது விசாரணைக்குநல்லதல்ல. எனவே குற்றப் பத்திரிகையை படித்துப் பார்க்க வழக்கறிஞர் ஜோதிக்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கூறிய நீதிபதி பச்சாப்பூரே, அன்று முதல் விசாரணை தினமும்நடைபெறும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணை ஆரம்பமானது முதல் சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை ஜெயலலிதா, சசிகலா, தினகரன், இளவரசிஆகியோர் ஆஜராகவில்லை. சின்ன எம்ஜிஆர் சுதாகரன் மட்டுமே இரு முறை ஆஜராகியுள்ளார். இன்று அனைவரும் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இன்றும் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஆஜராகவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications