அப்ரூவர் ஆகிறார் ஆதியின் கூட்டாளி ஜெயவீரன்
சென்னை:
மோசடி சங்கராச்சாரியாருக்கு ஒரு ரவி சுப்பிரமணியம் மாதிரி மோசடி மன்னன் ஆதிகேசவனின் விவகாரத்தில் அவரது கூட்டாளிஜெயவீரனே அப்ரூவராக ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆதிகேசவன் கைதைத் தொடர்ந்து தலைமறைவான ஜெயவீரனை மைரிசூல் வைத்து போலீஸார் கைது செய்தனர்.சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட அவரிடம் ஆதிகேசவன் குறித்து போலீஸார் கடந்த 4 நாட்களாக தீவிர விசாரணைநடத்தினர்.
செய்யாறு உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் ஜெயவீரனை அழைத்துச் சென்ற போலீஸார், அங்கு ஆதிகேசவன் வாங்கிக்குவித்துள்ள சொத்துக்களை அடையாளம் காட்டக் கூறினர். ஜெயவீரனும் சொத்துக்களை அடையாளம் காட்டினார்.
ஆதியுடன் சேர்ந்ததால் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஏராளமான தங்க நகைகளை தனது குடும்பத்திற்கு ஜெயவீரன்வாங்கியதாக போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து ஜெயவீரனின் மனைவி தங்கியுள்ள பாளையங்கோட்டைக்குபோலீஸார் விரைந்தனர்.
அங்கு ஜெயவீரனின் மனைவி வீட்டில் சோதனை நடத்தி வீட்டில் இருந்த 30 பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
இந் நிலையில் இந்த வழக்கில் ஆதிக்கு எதிராக அப்ரூவர் ஆகிவிட ஜெயவீரன் விருப்பம் தெரிவித்துள்ளதாக போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது.
குஜராத் கூட்டாளி எங்கே?:
இதற்கிடையே, ஆதிகேசவனின் இன்னொரு கூட்டாளியான குஜராத்தைச் சேர்ந்த ரமேஷ் சந்த் என்பவன் குறித்துபோலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இவரது சென்னை வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது எழும்பூரில் உள்ள நகைக் கடை தொடர்பான சில ஆவணங்கள் போலீஸாரிடம் சிக்கின.
இந்த கடையின் உரிமையாளர் உஜ்வல். அவர் தற்போது தலைமறைவாகி விட்டார். உஜ்வல் மூலமாக, ஹவாலா வழியில்,ஆதிகேசவன் வெளிநாட்டுப் பணத்தை இந்தியப் பணமாக மாற்றியிருக்கலாம் என்று போலீஸார் தற்போது சந்தேகிக்கிறார்கள்.
உஜ்வலைத் தேடும் பணியை தற்போது போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
வெளிநாட்டு வங்கிக் கணக்குகள்:
இதற்கிடையே, ஆதி கேசவன் மும்பை, டெல்லி ஆகிய ஊர்களில் உள்ள வெளிநாட்டு வங்கிகளில் வைத்துள்ள வங்கிக்கணக்குகளை முடக்க கோரி சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஆதி கேசவன் மீது மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரைச் சேர்ந்த 11 பேர் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம்விசாரணை நடத்த தனிப்படையினர் நாசிக் விரைந்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications