கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த வருடங்களைப் போலவே இந்த ஆண்டும் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களில் பெரும்பாலானோர்எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பம் ஆகிய படிப்புகளில்சேருவதற்கே ஆர்வம் காட்டுகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியவர்களில் 76.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 79.3 சதவீத மாணவியரும், 74.1 சதவீத மாணவர்களும் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகளும் வெளியாகி விட்டன. அவற்றில் கணிதப் பாடத் தேர்வில் யாருமே 100சதவீதம் பெறவில்லை. ஆனால் மருத்துவப் படிப்புக்கான தேர்வை எழுதியவர்களில் 11 பேர் 100 சதவீதம் பெற்றுள்ளனர்.

எனவே மருத்துவப் படிப்பில் சேருவதற்கான போட்டி வலுவாகவும், பொறியியல் படிப்பில் சேருவதற்கான போட்டி முந்தையஆண்டைப் போல இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதய சூழ்நிலையில் கட் ஆப் மதிப்பெண் கடந்த ஆண்டைவிட குறைந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் தகவல்தொழில் நுட்பம் ஆகிய படிப்புகளில் சேருவதற்கே இந்த வருடமும் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

சாப்ட்வேர் தொழிலில் இப்போது வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளை படித்தால் உடனடிவேலை என்பது உறுதியாகி விட்டது. ஏராளமான முன்னணி நிறுவனங்கள் சாப்ட்வேர் வல்லுனர்களை வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட சுமார் 30 பொறியியல் கல்லூரிகளில் மட்டும் கேம்பஸ் இன்டர்வியூநடத்தப்பட்டது. பிறகு அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த இதர கல்லூரிகளிலும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டது. இதற்காகவே மாநில வேலை வாய்ப்பு மையமும் உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் சென்னை, மதுரை , கோவை ஆகிய 3 மண்டலங்களில் அவற்றின் எல்லைகளுக்கு உட்பட்ட பொறியியல்கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டது.

இதன் முலம் விப்ரோ, இன்போசிஸ், டி.சி.எஸ் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் ஏராளமான மாணவர்களை வேலைக்குதேர்ந்தெடுத்தன.

இன்னும் சில ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் சாப்ட்வேர் தொழில் இன்னும் வேகமாக வளர்ச்சி அடையும்என்பதால் அடுத்த சில ஆண்டுகளில் இந்த துறையில் வேலை வாய்ப்பு மேலும் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+