சென்னை மாநகராட்சியில் பாட்டில் வீச்சு: திமுக பெண் கவுன்சிலர்கள் காயம்
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் அடிதடி மோதல் நடந்தது. அதிமுகவினர்பாட்டில் வீச்சு நடத்தியதில் இரு திமுக பெண் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.
சென்னை மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. அப்போது சமீபத்தில் 110 மற்றும் 131 ஆகியவார்டுகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு அதிமுக உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
அப்போது அதிமுகவைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் குறித்து சில கருத்துக்களைக்கூறியதால், திமுகவினர் கடும் கோபமடைந்தனர். பதிலுக்கு ஜெயலலிதா குறித்து அவர்கள் பேச இரு தரப்பினருக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டது.
உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறினார். ஆனால் யாரும் கேட்கவில்லை.திடீரென கைகலப்பு ஏற்பட்டது. பலருக்கு அடியும் விழுந்தது.
அப்போது பேப்பர்கள் கிழித்து எறியப்பட்டன. பேப்பர் வெயிட்டுகளும் பறந்தன. மைக்குகள் பறந்தன.
அப்போது திமுகவினர் மீது அதிமுக கவுன்சிலர்கள் பாட்டில்களை வீசினர். இதில் திமுக பெண் உறுப்பினர்களான சாந்தி பாய்மற்றும் நிர்மலா தேவி ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
பின்னர் திமுக உறுப்பினர்களை அவையை விட்டு வெளியேற்றுமாறு துணை மேயர் கராத்தே தியாகராஜன் உத்தரவிட்டார்.இதையடுத்து அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications