முன் ஜாமீன் கேட்கும் ஆதியின் மகன்
சென்னை:
மோசடி மன்னன் ஆதிகேசவனின் மகன் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதாகியுள்ள ஆதிகேசவனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்துவருகிறார்கள். அவருடைய கூட்டாளிகள் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டனர்.
ஆதியின் பல திருவிளையாடல்களில் அவரது மகன் சாரதிக்கும் தொடர்பு உண்டு என்று போலீஸார் நம்புகிறார்கள். இது குறித்துசென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் நட்ராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந் நிலையில் தற்போது தலைமறைவாக உள்ள சாரதி (வயது22) முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
அந்த மனுவில் நான் எம்.பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறேன். எனது தந்தை ஆதிகேசவனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்து விட்டார்கள். அவரை விடுவிக்க வழக்கறிஞர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
எனது தந்தையை விடுவிக்க முயன்று வரும் என்னை வேண்டும் என்றே வழக்கில் சேர்த்துள்ளனர். நான் எந்தத் தவறும்செய்யவில்லை. நான் தான் குடும்பத்துக்கு மூத்த மகன். குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் நான் தான் கவனிக்கவேண்டியுள்ளது.
எனவே என்னை போலீஸார் கைது செய்தால் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபரி சர்தார் சக்கரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில், ஆதிகேசவன் மீது 30 புகார்கள் வந்துள்ளன. இதுவரை அவர் ரூ 5.75 கோடி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மனுதாரர் ரவுடிகளுடன் சேர்ந்து பணத்தை திருப்பிக் கேட்டவர்களை மிரட்டியுள்ளார். மேலும் வழக்கு விசாரணை இன்னும்முடியவில்லை. விசாரணை மிகவும் முக்கிய கட்டத்தில் உள்ளது. எனவே சாரதிக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்றுகூறப்பட்டுள்ளது.
பின்னர் வழக்கறிஞர்கள் விவாதம் நடந்தது. இதன் பிறகு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications