விடைத்தாள் மோசடி: மேலும் ஒரு கல்லூரிக்கு தொடர்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொறியியல் கல்லூரி விடைத்தாள் மோசடியில் மேலும் ஒரு கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாகசென்னை மாநகர காவல்துறை ஆணையர் நட்ராஜ் கூறினார்.

இதற்கிடையே இந்த விடைத்தாள் மோசடியில் தொடர்புள்ள சோனியா என்ற மாணவியும், காதர் மொகைதீன் என்ற மாணவரும்தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

செய்தியாளர்களிடம் நட்ராஜ் இன்று பேசுகையில், பொறியியல் கல்லூரி விடைத்தாள் மோசடி தொடர்பாக 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுதவிர மேலும் 45 பேருக்குத் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஏற்கனவே சம்பந்தப்பட்ட 5 கல்லூரிகளைத் தவிர மேலும் ஒரு கல்லூயைச் சேர்ந்த மாணவர்களுக்கும் தொடர்புஇருப்பது தெரியவந்துள்ளது. மோசடியில் தொடர்புடைய, தலைமறைவாக உள்ளவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றார்.

கல்லூரி நிர்வாகிகளிடம் விசாரணை:

இதற்கிடையே விடைத்தாள் மோசடி தொடர்பாக 5 தனியார் சுய நிதி பொறியியல் கல்லூகளின் நிர்வாகிகள், முதல்வர்களிடம்நேற்றும் இன்றும் விசாரணை நடைபெற்றது.

பொறியியல் கல்லூரி விடைத்தாள் மோசடி தொடர்பாக இதுவரை 11 மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழக தற்காலிகஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் 11 பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாக சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி, வண்டலூரில் உள்ளகிரசன்ட் பொறியியல் கல்லூரி, சேலையூரில் உள்ள பாரத் பொறியியல் கல்லூரி, தாகூர் பொறியியல் கல்லூரி மற்றும்வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் முதல்வர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்தியகுற்றப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து நேற்று அவர்கள் ஆஜராகினர். அவர்களிடம் உதவி கமிஷ்னர் அன்புமொழி தலைமையிலான டீம் விசாரணைநடத்தியது. இன்றும் விசாரணை நடந்தது.

அப்போது மோசடியில் சிக்கியுள்ள மாணவர்களின் புகைப்படங்கள், அவர்களது கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றைஅன்புமொழியிடம் கல்லூரி முதல்வர்கள் ஒப்படைத்தனர்.

இந் நிலையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுத் துறை அதிகாரி ஜெயபாலிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

2 மாணவர்களுக்கு முன் ஜாமீன் மறுப்பு:

இதற்கிடையே இந்த விடைத்தாள் மோசடியில் தொடர்புள்ள சோனியா என்ற மாணவியும், காதர் மொகைதீன் என்ற மாணவரும்தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இந்த மோசடியில் தொடர்புள்ள 41 மாணவர்களில் ஒருவரான சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சோனியா பியதர்ஷினியும்,மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த மாணவர் காதர் மொகைதீனும் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

சோனியா தாக்கல் செய்த மனுவில் நான் பள்ளிக்கரணை தாகூர் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறேன். இ.சி.இ. பட்டப்படிப்புப பிரிவில் தகுதி அடிப்படையில்தான் சேர்ந்தேன். நான் நன்றாகத்தான் தேர்வு எழுதினேன். விடைத்தாள் மோசடியில் நான்ஈடுபடவில்லை.

ஆனால் விடைத்தாள் மோசடி வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் 465, 467, 468, 420, 120பி ஆகிய பிரிவுகளின் கீழ்சந்தேகத்தின் அடிப்படையில் எனது பெயரையும் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் கைதானவர்கள் ஏற்கனவே ஜாமீனில்விடுதலையாகியுள்ளனர். எனவே என்னையும் கைது செய்தால் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

காதர் மொகைதீன் தாக்கல் செய்திருந்த மனுவில், 4வது செமஸ்டர் அரியர்ஸ் தேர்வு எழுதியிருந்தேன். விடைத்தாள் மோசடியில்நான் ஈடுபடவில்லை. தவறான தகவலின் அடிப்படையில் எனது பெயரை வழக்கில் சேர்த்துள்ளனர்.

எனது தந்தை சாதாரண டெய்லர், தினசரி சம்பாதித்து எனது குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார், என்னையும் படிக்க வைத்துவருகிறார். எங்களது குடும்பம் ஏழையாகும். நான் கைது செய்யப்பட்டால் எனது குடும்பமே கடுமையாக பாதிக்கப்படும் என்றுகூறியிருந்தார்.

இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி சர்தார் சக்காரியா உசேன், வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை என்ற அரசுவக்கீலின் வாதத்தை ஏற்றுன் ஜாமீன் கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.

இந்த மோசடியில் முக்கிய புள்ளியான புரோக்கர் விஜய்குமார் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளான். இவன் மூலமாகத் தான்விடைத் தாள்களை மாற்ற ரூ. 6 லட்சம் வரை மாணவர்கள் பணம் கொடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+