விநாயகர் கையில் 'பீர் பாட்டில்' !!
வாஷிங்டன்:
விநாயகரின் கையில் பீர் பாட்டில் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்ட பீர் பாட்டில்களை விற்பனை செய்த அமெரிக்க மதுதயாரிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள லாஸ்ட் கோஸ்ட் என்ற ஒரு மது தயாரிப்பு நிறுவனம், சமீபத்தில் 'இண்டிகா' என்ற புதிய பீர் ரகத்தைவெளியிட்டது. அந்த புதிய ரக பீர் பாட்டிலில் விநாயகரின் உருவத்துடன் கூடிய லேபிள் இருந்தது.
விநாயகரின் நான்கு கைகளிலும், தும்பிக்கையிலும் பீர் பாட்டில் இருப்பது போல அந்த லேபிள் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதற்குஅமெரிக்காவிலுள்ள இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந் நிலையில், வாஷிங்டனிலுள்ள கோல்டன் கேட் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் பிரிஜ் திர் என்ற இந்திய அமெரிக்க சட்டமாணவர், லாஸ்ட் கோஸ்ட் மது தயாரிப்பு நிறுவனத்தின் மீது 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து பிரிஜ் திர் கூறுகையில், அவர்களது கம்பெனி விளம்பரத்திற்காக உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானஇந்துக்களின் மத உணர்வை எப்படி புண்படுத்தலாம்?
விளம்பரம் செய்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. ஆனால் இப்படியெல்லாமா விளம்பரம் செய்வார்கள்? இந்துக்களின் மனதைபுண்படுத்தியதற்காக அந்த மது தயாரிப்பு நிறுவனத்தின் மீது 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளேன்என்றார்.
இதற்கிடையே விநாயகரின் உருவ லேபிளை லாஸ்ட் கோஸ்ட் மது தயாரிப்பு நிறுவனம் விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பார்பரா குரூம் கூறுகையில், எந்த இந்துவின் மனதையும் நாங்கள் புண்படுத்த விரும்பவில்லைஎன்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications