ஸ்டெயின்ஸ் கொலை: தாராவுக்கு தூக்கு ரத்து!
கட்டாக்:
ஒரிஸ்ஸாவில் ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டேயின்ஸ் மற்றும் அவரது 2 மகன்களை உயிரோடு எரித்துக் கொன்றவழக்கில் முக்கிய குற்றவாளிவான தாராசிங்கிற்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டேயின்ஸ் தனது மனைவி கிளாடிஸ், மகன்கள் பிலிப்ஸ் (வயது 11) மற்றும் திமோத்தி(வயது 8) ஆகியோருடன் ஒரிஸ்ஸா மாநிலத்திலுள்ள மனோகர்பூர் கிராமத்தில் தங்கியிருந்து சமூக சேவை செய்து வந்தார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியா உட்பட பல உலக நாடுகளும் இதற்கு கடும்கண்டனம் தெரிவித்தன.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தாராசிங் என்பவனின் தலைமையில் 13 பேர் கொண்ட கும்பல் தான் ஸ்டேயின்ஸ்உட்பட 3 பேரையும் எரித்துக் கொன்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தாராசிங் உட்பட 13 பேரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக கட்டாக் செஷன்ஸ் நீதிமன்றத்தில்வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த 2003ம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. முக்கிய குற்றவாளி தாராசிங்குக்கு தூக்குதண்டனையும் மற்ற 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து தாராசிங்கும் மற்ற 12 பேரும் ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இந்த மனுக்களைவிசாரித்த தலைமை நீதிபதி சுர்ஜித் பர்மன் ராய் மற்றும் நீதிபதி லட்சுமி காந்த் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,தாராசிங்குக்கு செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 12 பேரையும் விடுதலை செய்வதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள கிரஹாம் ஸ்டேன்ஸின் மனைவி கிளாடிஸிடம் கருத்து கேட்டபோது, நான்இதுகுறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. ஏற்கனவே பல முறை இதுபற்றி கூறி விட்டேன் என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications