துரைமுருகனுக்கு நீதிபதி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வராமல் இருப்பதற்கு வேலூர் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

கடந்த திமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த துரைமுருகன், வருவாய்க்கு மீறிய வகையில் ரூ. 4 கோடி வரை சொத்துசேர்த்ததாக கூறி அதிமுக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது. துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி, மகன்உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குவழங்கப்பட்டு விட்டது. இந் நிலையில் கடந்த 3 முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 3 முறையும் துரைமுருகன்ஆஜராகவில்லை.

இந் நிலையில் இன்று வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது துரைமுருகன் ஆஜராகவில்லை.

இதையடுத்து தொடர்ந்து துரைமுருகன் நீதிமன்றத்திற்கு வராமல் இருப்பது சரியல்ல, வழக்கு அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஜெகன்னாதன்உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+