சேது சமுத்திரத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி:
சேது சமுத்திரம் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதற்காக ரூ. 2,427.40 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சேது சமுத்திரத் திட்டம், சென்னையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றை விரைவில் (தமிழக சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பாக) தொடங்க வேண்டும் என பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் கருணாநிதிவலியுறுத்தினார்.
இந் நிலையில் இன்று அமைச்சரவையைக் கூட்டினார் பிரதமர். அதில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்துக்கு ஒப்புதல்அளிக்கப்பட்டதோடு, இத் திட்டத்துக்கு ரூ. 2,427.40 கோடியை ஒதுக்கவும் அனுமதி தரப்பட்டது.
கேபினட் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இதனைத் தெரிவித்தார். அவர் கூறுகையில்,
சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்தின் 100 ஆண்டுக் கனவு. ராமேஸ்வரம் கடல் பகுதியில் நிறைவேற்றப்படவுள்ள இத் திட்டத்துக்குஒப்புதல் அளித்ததன் மூலம் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழியையும் பட்ஜெட் வாக்குறுதியையும்மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது.
இத் திட்டத்தை அமலாக்குவற்காக சேது சமுத்திரக் கழகம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும். இத் திட்டத்தின்படி வங்கக்கடலுக்கும் அரபிக் கடலுக்கும் இடையே கடலுக்குள் மாபெரும் கால்வாய் உருவாக்கப்படும். தமிழகத்துக்கும் இலங்கைக்கும்இடையிலான கடல் பகுதியில் ஆழம் குறைவு என்பதால் பெரிய கப்பல்கள் செல்ல முடிவதில்லை.
இப்போது உருவாக்கப்படும் இந்தக் கடல் கால்வாய் காரணமாக, கப்பல்கள் இலங்கையை சுற்றிக் கொண்டு செல்வதுதவிர்க்கப்படும்.
சூயஸ் கால்வாய், பானாமா கால்வாய் போல இந்தக் கால்வாயும் பலவிதமான நேரடி, மறைமுக பலன்களை நாட்டுக்கு வழங்கும்.இத் திட்டத்தில் போடப்படும் பணம் நிச்சயம் திரும்பி வரும். அத்தோடு நாட்டின் பாதுகாப்புக்கும் இந்தக் கால்வாய் பெரும்சேவையாற்றப் போகிறது.
ரூ. 2,427.40 கோடி செலவு பிடிக்கும் இத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 495 கோடியும், நாட்டின் பல்வேறு துறைமுக பொறுப்புக்கழகங்கள் ரூ. 50 கோடியும், சென்னை, எண்ணூர், விசாகபட்டினம், பாரடீப் ஆகிய இடங்களில் உள்ள கடலடி தூர்வாறும்கழகங்கள் தலா ரூ. 30 கோடியும் வழங்கும். இதைத் தவிர பிற அமைப்புகளும் நிதி வழங்கவுள்ளன.
அத்தோடு ரூ. 226 கோடிக்கு தனியாரிடமிருந்தோ அல்லது பங்குச் சந்தையில் இருந்தோ நிதி திரப்படும். தூத்துக்குடி துறைமுகப்பொறுப்புக் கழகம் மூலமாக சேது சமுத்திரத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும் என்றார் சிதம்பரம்.
இந்தக் கால்வாய் அமைந்தால் கப்பல்கள் இலங்கையை 424 கடல் மைல்கள் வீணாக சுற்றுவதையும், 30 மணி நேரத்தையும், எரிபொருளையும் சேமிக்கலாம்.
அதே போல தாய்லாந்தில் சோங்கலா என்ற இடத்தில் ஒரு இந்தியத் துணைத் தூதரகத்தைத் திறக்கவும் அமைச்சரவை ஒப்புதல்அளித்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications