சுனாமி: வீடுகள் கட்ட ரூ. 1,551 கோடி ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உலக வங்கியின் நிதியுதவியுடன் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள சுனாமி மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 1,551.4 கோடிசெலவில் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ. 1852.74 கோடி நிதியுதவியைஉலக வங்கி அறிவித்துள்ளது. இத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் சுனாமியால் வீடுகளை இழந்தவர்களுக்கு அடுக்கு மாடி வீடுகள், வீடுகள் கட்டவும், வீடுகளைபழுதுபார்க்கவும் ரூ. 1,551.4 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுனாமி பாதித்த பகுதிகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ரூ. 122.2 கோடி, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தரூ. 85.41 கோடி, தொழில்நுட்பப் பயிற்சிக்கு ரூ. 41.17 கோடி, அமலாக்க ஆதரவுக்கு ரூ. 52.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர கால சுனாமி மறு சீரமைப்பு திட்டப் பணிகள் அனைத்தும் 2007ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிக்கப்படும்என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான நில ஒதுக்கீடு தொடர்பானஉத்தரவை தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் நேற்றே ஜெயலலிதா வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+