அவசரமாய் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
பாரிஸ் சென்று கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், அவ் விமானம் வானிலேயே எரிபொருளைக்கொட்டிவிட்டு மீண்டும் மும்பையில் அவசரமாயக் தரையிறங்கியது.
இதனால் விமானம் தரையிறங்குவதில் சிரமம் ஏற்படலாம் என விமானிகள் கருதியதால் அதனை மீண்டும் மும்பைக்கே திருப்பினர்.இதையடுத்து 11.30 மணிக்கு அந்த விமானம் மீண்டும் மும்பை வான்வெளியை அடைந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தின் எரிபொருள் வானிலிருந்து கொட்டப்பட்டது. விமான நிலையமும் எமர்ஜென்சிலேண்டிங்குக்குத் தயார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. பழுது நீக்கப்பட்ட பின் இன்று பிற்பகலிலேயே அந்த விமானம் மீண்டும்கிளம்பிச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications