சேது: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை- பாலு
சென்னை:
சேது சமுத்திரம் திட்டத்தால் சுற்றுப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில், சேது சமுத்திரம் திட்டம், சுற்றுப்புற சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில்நிறைவேற்றப்படும். இது தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் கிடையாது.
சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (எஸ்சிஎல்) கட்டுப்பாட்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். திட்டம் நிறைவேற்றப்பட்ட13வது வருடத்திலிருந்து எஸ்சிஎல் நிறுவனம் லாபம் ஈட்டத் தொடங்கி விடும்.
இத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 2,427 கோடி. இத் திட்டத்தில் இலங்கை அரசுக்கு இருந்த சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டன.சமீபத்தில் இலங்கை அரசு அதிகாரிகளை டெல்லிக்கு வரவழைத்து அவர்களுக்கு இருந்த சந்தேகங்களை நாங்கள் தீர்த்து வைத்துவிட்டோம்.
சென்னை-திருத்தணி, திண்டுக்கல்-திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 8 வழித் தடங்கள் தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு 4 வழிச் சாலைகளாக மேம்படுத்தப்படும். மொத்தம் 1,255 கி.மீ. சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மேம்படுத்துவதற்காகரூ. 6,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 3 ஆண்டுகளில் முடிவடையும்.
தங்க நாற்கர சாலைத் திட்டத்தை திட்டமிட்ட படி இந்த வருடத்திற்குள் நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு காரணம் சில மாநிலங்கள் இத்திட்டத்திற்கு ஒத்துழைக்காதது தான். தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் இன்னும் இத்திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தி தரவில்லை.
52 சதவீதம் நிலத்தை தமிழகமும், 28.74 சதவீதம் நிலத்தை மகராஷ்டிரமும், 18.57 சதவீதம் நிலத்தை குஜராத்தும், ஜார்கண்ட் மாநிலம் 12சதவீதம் நிலத்தையும், மேற்கு வங்காளம் 4.60 சதவீத நிலத்தையும் இன்னும் கையகப்படுத்தி தர வேண்டியுள்ளது.
பாஜக ஆட்சியின் போது ஒரு நாளைக்கு 1.86 கிமீ சாலை தான் போடப்பட்டது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்குவந்த பிறகு இத்திட்டத்தில் ஒரு நாளைக்கு 6.85 கிமீ சாலை போடப்படுகிறது.
கடந்த 1 வருடத்தில் தமிழ்நாட்டில் தேசிய நான்கு வழிச்சாலைக்காக ரூ.6200 கோடி ஒதுக்கியுள்ளேன். இந்தப் பணிகள் 3 வருடத்திற்குள்முடிவடையும் என்றார் பாலு.












Click it and Unblock the Notifications