குழந்தைகள் கடத்தல்: மலேசிய நிறுவன தலைவருக்கு ஜாமீன் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

குழந்தைகள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சென்னை மலேசியன் சோசியல் சர்வீஸ் நிறுவன தலைவர் மற்றும்அவரது மனைவி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

சென்னையில் சாலையோரக் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்தது தொடர்பாக ஒரு கும்பலை சமீபத்தில் போலீஸார் கைது செய்தனர்.இந்தக் குழந்தைகள் விலைக்கு விற்கப்பட்ட திருவேற்காடு மலேசியன் சோசியல் சர்வீஸ் நிறுவன உரிமையாளர் ரவீந்திரநாத், நிறுவனத்தின்தலைவரும் அவரது மனைவியுமான வத்சலா உள்ளிட்ட மொத்தம் 10 பேர் இந்த வழக்கில் கைதாகியுள்ளனர்.

இவர்களில் ரவீந்திரநாத்தும், வத்சலாவும் ஜாமீன் கோரி எழும்பூர் 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு இன்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், இவர்களை இப்போது ஜாமீனில் விடுவித்தால், வழக்கு விசாரணைக்குகுந்தகம் ஏற்படும் என்றார். இதைத் தொடர்ந்து இருவரது ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+