பிளஸ் டூ வரை புத்தகங்கள் இலவசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் பிளஸ் டூ வரை மாணவ, மாணவியருக்கு இலவசமாக பாட நூல்கள் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.

விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்தச் சலுகையை அள்ளிவிட்டுள்ளார் ஜெயலலிதா.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுய நிதிஅடிப்படையில் பத்தாம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ, மாணவியருக்கு தற்போது இலவசமாக பாட நூல்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

இத் திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கும் நீட்டிக்கப்படுகிறது.அதன்படி பிளஸ் டூ வரை இனிமேல் மாணவ, மாணவியர்களுக்கு அரசே இலவசமாக பாட நூல்கள் வழங்கும்.

இத் திட்டத்தின் காரணமாக ஆண்டுக்கு அரசுக்கு ரூ. 22.25 லட்சம் செலவாகும். நடப்பு கல்வியாண்டு முதலே இந்தத் திட்டம் அமலுக்குவருகிறது.

இதன் மூலம் 1ம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான மாணவ, மாணவியருக்கு பாட நூல்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த முழுதிட்டத்திற்கும் ரூ. 83.70கோடி செலவாகும். இதனால் மொத்தம் 1.80 கோடி மாணவர்கள் பலனடைவர் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+