கருணாநிதி மீது குற்றப் பத்திரிக்கை: ஜெ. திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மேம்பால ஊழல் வழக்கு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி மீது விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இந்தப் பாலங்கள் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகஅதிமுக ஆட்சிக்கு வந்தததும் புகார் கூறியது.

இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர் கடந்த 2001ம் வருடம்நள்ளிரவில் போலீசாரால் அத்துமீறிய வகையில் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கோ.சி.மணி மற்றும் மு.க.ஸ்டாலின், முன்னாள் தலைமை செயலாளர் நம்பியார்ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

அதிமுக அரசு போட்ட இந்த வழக்கில் உரிய ஆதாரங்கள் இல்லாததால் கடந்த 4 வருடங்களாக குற்றப் பத்திரிகை கூட தாக்கலாகவில்லை.

இந் நிலையில் சமீபத்திய இடைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திமுக மீது நெருக்கடியை அதிகரிக்க அதிமுக முயல்கிறது. இந்தமேம்பால வழக்கை தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக வைத்து குற்றப் பத்திரிக்கை தயார் செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதனால் விரைவில் கருணாநிதி மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தேவைப்பட்டால் கூடுதலாகவிசாரணை நடத்தி மேலும் சில ஆவணங்களை திரட்டி இன்னொரு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவும் போலீஸார் திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.

இதே வேகத்தை ஜெயலலிதா-சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலும், தர்மபுரி மாணவிகள் கோரமாக எரித்துக் கொல்லப்பட்டவழக்கிலும் தமிழக அரசும், போலீசாரும் காட்டியிருக்கலாமே!!.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+