மலேசியாவில் தவித்த இளைஞர் மீட்பு: தமிழக போலீஸார் துரித நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலியான வேலை உத்தரவு மூலம் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு போலீஸாரிடம் சிக்கித் தவித்த பாண்டிச்சேரியை சேர்ந்தஇளைஞரை தமிழக போலீஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு பத்திரமாக மீட்டுள்ளனர்.

புதுவையைச் சேர்ந்தவர் வாசு. பட்டதாரியான இவர் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்ஒன்றை அணுகியுள்ளார். அவருக்கு மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக கூறிய அந் நிறுவனம் அதற்காக வாசுவிடமிருந்து ரூ.1,90,000 பணத்தைப் பெற்றுக் கொண்டது.

பின்னர் வாசுவிடம் ஒரு வேலை நியமன உத்தரவைக் கொடுத்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு கடந்த 7ம் தேதி அனுப்பிவைத்துள்ளனர். அங்கு போய்ச் சேர்ந்த வாசு, விமான நிலையத்திலேயே 3 நாட்கள் தங்கியிருந்தார். ஆனால் தன்னை யாரும் வந்து கூட்டிப்போகாததால் அவர் குழப்பமடைந்தார்.

இந் நிலையில் மலேசியப் போலீஸார் வாசுவைக் கைது செய்தனர்.

வாசுவின் நிலையை அறிந்த அவரது தந்தை, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில்நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் வாசுவை மீட்ட போலீஸார் அவரை சென்னைக்கு அழைத்துவந்தனர்.

சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு நிறுவனத்தின் உமையாளர் ராஜேந்திரன், டில்லி பாஷா, ஜோசப் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். மலேசியாவில் சிக்கித் தவித்த இளைஞரை 12 நாட்களில் போலீஸார் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+