நாளை முதல் ஊட்டி மலர்க் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
புகழ்பெற்ற ஊட்டி மலர்க் கண்காட்சி நாளை தொடங்குகிறது. ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா, மலர்க் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
குளு குளு ஊட்டியில் கோடை சீசன் களை கட்டியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் ஊட்டியில் அலை மோதி வருகிறது கடந்த 14ம் தேதிரோஜாக் கண்காட்சி நடந்தது. பல வகையான ரோஜாக்களின் கூட்டத்தை சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர்.
கண்காட்சியை ஆளுநர் பர்னாலா நாளை தொடங்கி வைக்கிறார். இந்தக் கண்காட்சியில் தமிழக அரசின் தோட்டக் கலைத்துறை சார்பில்பல்வேறு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. காய்கறிகள், பழங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவையும் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
காலை 8.30 மணிக்கு கண்காட்சி தொடங்குகிறது. நிகழ்ச்சியில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஏ.மில்லர், மாவட்ட ஆட்சித் தலைவர்விஜய ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications