பாம்பன் ரயில் பாலத்தில் மோதிய கப்பல்
ராமேஸ்வரம்:
பாம்பன் பகுதியில் கடலில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் தீவுக்கு இடையில் உள்ள கடல் பகுதியில், இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் ரயில் பாலம் மற்றும்சாலை மேம்பாலம் ஆகியவை உள்ளன.
முன்பெல்லாம் எப்போதாவதுதான் இந்தப் பாலம் மேலே தூக்கப்படும். ஆனால் சமீப காலமாக இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்துஅதிகரித்துள்ளதால், இந்த ஆண்டில் மட்டும் 100 முறை பாலம் தூக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் கோவாவில் இருந்து ஒரு சரக்குக் கப்பல் வியாழக்கிழமை காலை எண்ணூ
பாலத்தை கப்பல் கடந்தபோது, திடீரென கடலில் ஏற்பட்ட வேகமான நீரோட்டத்தால், கப்பல் வேகமாக ஒரு பக்கமாகத் தள்ளப்பட்டுபாலத்தின் மீது மோதியது.
கப்பல் மோதியதால் பலத்த சப்தம் ஏற்பட்டதால் அந்தப் பகுதியே பரபரப்பில் ஆழ்ந்தது. பாலம் தூக்கப்பட்டதையும், கப்பல் கடப்பதையும்சாலை மேம்பாலத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் இந்த மோதலைப் பார்த்து பீதியடைந்தனர்.
இந்த விபத்தில் பாலத்திற்கு சேதம் ஏதும் இல்லை என்றாலும் கப்பலின் பின்புறம் பலத்த சேதமடைந்தது. இருப்பினும் கப்பல் தனதுபயணத்தை தொடர்ந்தது.












Click it and Unblock the Notifications