இங்கிலாந்தில் பள்ளி மாணவன் கடத்தல்: பெண் உட்பட 4 இந்தியர்களுக்கு சிறை

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

லண்டனில் 11 வயது பள்ளி மாணவனை கடத்தி அவனது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டிய ஒரு பெண் உட்பட 4 இந்தியர்களுக்குஇங்கிலாந்து நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த ரவிதீப் பாபு (வயது 23), அமர்ஜித் தாரிவார் (வயது (30), குர்னாம் தனோவா (வயது 22) மற்றும் ஆயிஷா செளத்ரிஆகிய 4 பேரும் சேர்ந்து, லண்டனில் பள்ளி சென்று வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த 11 வயது மாணவனை காரில் கடத்தி சென்றனர்.

பிறகு அந்தச் சிறுவனை சுமார் 26 மணி நேரம் ஒரு அறையில் அடைத்து வைத்து அவனது பெற்றோரிடம் 40,000 பவுண்ட் பணம் கேட்டுமிரட்டினர்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், சிறுவனைக் கடத்திய 4 இந்தியர்களையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைமிடில்ஸெக்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரிச்சர்ட் மாத்சன், குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் சிறை தண்டனைவழங்கி தீர்ப்பளித்தார்.

முதல் குற்றவாளி ரவிதீப் பாபுவுக்கு 12 வருடங்களும், அமர்ஜித் தரிவாருக்கு 7 வருடங்களும், குர்னாம் தனோவாவுக்கு 6 வருடங்களும்மற்றும் ஆயிஷா செளத்ரிக்கு மூன்றரை வருடங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறை தண்டனை முடிந்ததும் 4 பேரையும் இந்தியாவுக்கு நாடு கடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறும்போது, 4 பேரும் செய்த குற்றம் மன்னிக்க முடியாததாகும். என்னுடைய கருத்தின் படி நீங்கள் மிகவும்அபாயகரமானவர்கள் என்று குறிப்பிட்டார்.

இவர்கள் 4 பேரும் சட்டத்திற்கு புறம்பாக இங்கிலாந்தில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+