ஆதியின் வட மாநில மோசடிகள்: 4 தனிப்படைகள் அமைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆதிகேசவனின் வட மாநில மோசடி விவகாரங்கள் குறித்து விசாரிக்க 4 போலீஸ் தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு இந்தியர்களிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த ஆதிகேசவன் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

இந் நிலையில் ஆதிகேசவனின் வட மாநில மோசடிகள் குறித்தும் ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. மும்பை, டெல்லி மற்றும்வட கிழக்கு மாநிலங்கள், கேரளா ஆகியவற்றில் ஏஜென்டுகளை வைத்து பெரிய அளவுக்கு ஆதி கேசவன் மோசடி செய்துள்ளதாகத்தெரிகிறது.

இதையடுத்து இந்த மோசடிகள் குறித்து விசாப்பதற்காக 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு தனிப் படையினரும் நாளைமறுதினம் இந்த மாநிலங்களுக்கு கிளம்புகின்றனர்.

இதற்கிடையே, ஆதிகேசவன் கொடுத்த நூற்றுக்கணக்கான காசோலைகள் திரும்பி வந்துள்ளதால், அவர் மீது தனியாக செக் மோசடிவழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு வருமாறு ஆதிகேசவன் கணக்கு வைத்துள்ள 117 வங்கிகளின்மேலாளர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+