நகை மோசடி: ஜெயலட்சுமிக்கு குற்ற பத்திரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

Jayalakshmi
நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி
நகைக் கடையில் மோசடி செய்த வழக்கில், ஜெயலட்சுமிக்கு திருச்சி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள நகைக் கடை ஒன்றில் கடந்த 2003ம் ஆண்டு மே 5ம் தேதி 15 பவுன் நகை வாங்கினார்ஜெயலட்சுமி. இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலுவின் உதவியுடன் இந்த நகையை ஜெயலட்சுமி வாங்கியுள்ளார்.

ஆனால் வாங்கிய நகைக்கான பணத்தை ஜெயலட்சுமி திருப்பித் தரவில்லை. இதை சுந்தரவடிவேலு தான் தனக்கு வாங்கித் தந்ததாகஜெயலட்சுமி கூறுகிறார்.

இந் நிலையில், பணத்தைக் கேட்டு நகைக் கடை உரிமையாளர் திருமூர்த்தி பலமுறை முயன்றும் ஒரு பலனும் இல்லை. இதையடுத்துபோலீஸில் அவர் புகார் கொடுத்தார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. விசாரணைக்குப் பின் மோசடி, சதி ஆகிய பிரிவுகளின் கீழ் ஜெயலட்சுமி, சுந்தரவடிவேலு (சஸ்பெண்ட்செய்யப்பட்டு விட்டார்) ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி திருச்சி தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்துஜெயலட்சுமி மற்று சுந்தரவடிவேலு ஆகிய இருவரையும் நீதிமன்றதிதல் ஆஜராகுமாறு கோர்ட் உத்தரவிட்டது.

இதன் பேரில் சுந்தரவடிவேலுவும், ஜெயலட்சுமியும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களிடம் குற்றப் பத்திரிக்கை நகலை நீதிபதி ஆர்.காமத்வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+