இன்று ராஜிவ் நினைவு தினம்: சோனியாவுக்கு நளினியின் வழக்கறிஞர் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 14வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந் நிலையில் ராஜிவ் கொலையில் கைதாகி வேலூர் சிறையில் இருக்கும் தனது பெற்றோரை சந்திக்க அனுமதி கிடைக்க உதவுமாறு நளினி-முருகன் தம்பதியின் மகள் அரித்ரா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜிவின் மறைவு தினத்தையொட்டி இன்று டெல்லி யமுனை நதிக்கரையில் உள்ள அவரது நினைவிடமான வீர் பூமியில் ஜனாதிபதி அப்துல்கலாமின் சார்பில் மலர் வளையம் வைக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவரும் ராஜிவின் மனைவியுமான சோனியா காந்தி, மகன் ராகுல், மகள் பிரியங்கா, மருமகன் ராபர்ட் வதேரா உள்ளிட்டஅவர்களது குடும்பத்தினர் இன்று காலை ராஜிவின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் கெளர், நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் ஏராளமானகாங்கிரஸ் தொண்டர்களும் மலரஞ்சலி செலுத்தினர்.

நளினியின் மகள் கோரிக்கை:

இந் நிலையில் ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி- தூக்கு தண்டனை பெற்று அதே சிறையில்அடைக்கப்பட்டுள்ள அவரது கணவர் முருகன் ஆகியோரின் மகளான அரித்ரா, தனது பெற்றோரை சந்திக்க உதவுமாறு சோனியா காந்திக்குகோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜிவ் கொலைக்கு முன் நளினி-முருகன் மணம் முடித்தனர். கொலைக்குப் பின் கர்ப்பமாக இருந்த நிலையில் நளினி கைதானார். வேலூர்சிறையில் நளினி அடைக்கப்பட்டிருந்போது தான் அரித்ரா பிறந்தார். அவர் இப்போது இலங்கையில் முருகனின் பெற்றோரிடம் வளர்ந்துவருகிறார்.

இப்போது 13 வயதை எட்டியுள்ள அரித்ரா தனது பெற்றோரை சந்திக்க முயன்றாலும் அவருக்கு இந்தியா விசா வழங்க மறுத்துவிட்டது.

இந் நிலையில் நளியின் வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறுகையில்,

சோனியா காந்தியின் உதவியால் தான் நளினின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அரித்ரா அனாதையாகிவிடக்கூடாது என்பதற்காககத் தான் அந்த உதவியைச் செய்தார் சோனியா.

அதே போல இப்போது தனது பெற்றோரை சந்திக்க ஆர்வத்துடன் இருக்கும் அரித்ராவுக்கு விசா கிடைக்க சோனியா உதவ வேண்டும்.முன்பு காட்டியது போல இப்போதும் கருணை காட்ட வேண்டும் என்றார்.

இப்போது நளினியும் முருகனும் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூரில் அஞ்சலி:

அதே போல ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்,மத்திய அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முனியப்பா உள்ளிட்ட காங்கிரஸார் மலர் அஞ்சலி செலுத்தினர்.

அங்கு சர்வமத பிரார்த்தனையும் நடந்தது.

புதுவையில் மோதல்:

ராஜீவ் காந்தி நினைவு நாளை அனுசரிப்பது தொடர்பாக புதுவையில் முதல்வர் ரங்கசாமி ஆதரவு காங்கிரஸாருக்கும், கண்ணன்தலைமையிலான புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

முதலியார்பேட்டை பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு அருகே கண்ணன் கட்சியினர் ராஜீவ் படத்தை வைத்து நினைவு தினத்தைஅனுஷ்டித்தனர். அப்போது அங்கு முன்னாள் எம்.எல்.ஏ. சபாபதி தலைமையில் திரண்டு வந்த காங்கிரஸ் தொண்டர்கள், தாங்களும் ஒருராஜீவ் படத்தை வைத்து நினைவு தினத்தை அனுஷ்டித்தனர்.

இதனால் இரு கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சியின் பேனர் கிழிக்கப்பட்டது.நிலைமை மோசமானதால் போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் விலக்கி விட்டு பெரும் வன்முறையைத் தடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+