பொது தேர்தலில் காஞ்சி பாச்சா பலிக்காது: ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
கோவை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டியில் நடத்திய அத்துமீறலை பொதுத் தேர்தலில் அதிமுகவால் நடத்த முடியாது என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஸ்டாலின் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பொதுத் தேர்தலில் அதிமுகவின் அராஜகம் எடுபடாது. அதை தகுந்த வழியில் நாங்கள் தடுப்போம். மக்களுக்கு ஜெயலலிதா அறிவித்துவரும் சலுகைகளைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். மாறாக, தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
ஜோதிடர் ஆலோசனைப்படி முன் கூட்டியே தேர்தல் நடத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்கதிமுக கூட்டணி தயார் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications