பொன் மாணிக்கவேல் கோவை எஸ்.பியாக நியமனம்
சென்னை:
சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த போது சர்ச்சையில் சிக்கிய எஸ்.பி. பொன் மாணிக்கவேல் கோவை எஸ்.பியாகமாற்றப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 6 மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி எஸ்.பியாக இருந்து வரும் ஏ. அமல்ராஜ் காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பியாக சமீபத்தில் தான்சமுத்திரப்பாண்டி நியமிக்கப்பட்டார். தற்போது சமுத்திரப்பாண்டி சென்னையில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் எஸ்.பியாகமாற்றப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப் பிரிவு துணை ஆணையர் இளங்கோவன், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பியாகமாற்றப்பட்டுள்ளார். அங்கு தற்போது எஸ்.பியாக உள்ள வரதராஜு, நெல்லை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
கோவை எஸ்.பியாக இருந்து வரும் டாக்டர் தினகரன், தேனி எஸ்.பியாக அறிவிக்கப்பட்டுள்ளார். கோவையின் புதிய எஸ்.பியாக,கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வந்த பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் எஸ்.பியாக இருந்தபோது பொன் மாணிக்கவேல் மீது ஓமலூர் டி.எஸ்.பி. மணிரத்தினம் சரமாரியாக புகார்கள் கூறிதலைமறைவானார். இதைத் தொடர்ந்து பொன்மாணிக்கவேல் அப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில்வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் மணிரத்தினம் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் அதே பொறுப்பில் தொடர்ந்தார். ஆனால் தற்போது அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications