சொத்து குவிப்பு வழக்கு: ஜெ இன்றும் ஆஜராகவில்லை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கு மற்றும் தினகரன் லண்டனில்ஓட்டல் வாங்கிய வழக்கு ஆகியவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கையும், ஓட்டல் வாங்கிய வழக்கையும் சேர்த்தே நடத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதும் விசாரணை நடக்கிறது.

கடந்த 16ம் தேதி நீதிமன்றம் கூடியதும் சொத்துக் குவிப்பு வழக்கையும், ஓட்டல் வழக்கையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்றுஉச்சநீதிமன்ற வழக்கறிஞர் துள்சி வாதாடினார்.

இதன் பிறகு ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ஜோதி வாதிடுகையில், வழக்கில் 2வதாக வழங்கப்பட்ட குற்றப் பத்திரிகையைமுழுவதுமாக படித்துப் பார்க்க 3 வார கால அவகாசம் தேவை. எனவே 3 வாரத்திற்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்என்றார்.

இதற்கு நீதிபதி பச்சாப்பூரே கடும் கண்டனம் தெரிவித்தார். இப்படி அடிக்கடி எதற்கெடுத்தாலும் தவணை கேட்பது நல்லதில்லை.கடந்த முறையே குற்றப் பத்திரிகையின் நகல்களை வழங்குவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதனால் அவை அனைத்தும் உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும். எனவே நீங்கள் கேட்பது போல 3 வாரத்திற்குவிசாரணையை தள்ளி வைக்க முடியாது என்றார்.

தினமும் விசாரணை:

அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் துள்சி, தொடக்கத்திலேயே இவ்வாறு மோதல் போக்குடன் நடப்பது விசாரணைக்குநல்லதல்ல. எனவே குற்றப் பத்திரிகையை படித்துப் பார்க்க வழக்கறிஞர் ஜோதிக்கு சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்என்று நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கூறிய நீதிபதி பச்சாப்பூரே, அன்று முதல் விசாரணை தினமும்நடைபெறும் என்று உத்தரவிட்டார்.

இதன்படி இன்று விசாரணை நடைபெற்றது. சசிகலா, இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர் ஜோதி இன்றும் தனது வாதத்தைதொடர்ந்தார். இவரது வாதம் முடிந்த பிறகு சுதாகரன் மற்றும் தினகரனின் வழக்கறிஞர்கள் வாதிட்டார்கள்.

இதன் பிறகு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வாதிட்டார்.

இன்றும் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால்நீதிமன்றத்திற்கு வரமுஐயவில்லை என்று அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை ஆரம்பமானது முதல் சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை ஜெயலலிதா, சசிகலா, தினகரன், இளவரசிஆகியோர் ஆஜராகவில்லை. சின்ன எம்ஜிஆர் சுதாகரன் மட்டுமே இரு முறை ஆஜராகியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+