லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை
லண்டன்:
லண்டனில் கத்திக்குத்து காயங்களுடன் இந்திய மாணவி தனது வீட்டின் அருகே பிணமாக கிடந்தார். அவர் எப்படிகொல்லப்பட்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லண்டனில் வசித்து வருபவர் சுரேஷ் ராய்தாதா. இந்தியரான இவர், அங்கு எலக்டிரிகல் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர்.
மேடைப்பாடகியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்ட ஜெஷ்மா, தனது ஆசையை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். அவர்ஒரு பாடலை பாடி அதையும் இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந் நிலையில் ஜெஷ்மாவின் 18வது பிறந்த நாளுக்கு 3 நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்து போனார். அவர் தனதுவீட்டின் அருகே கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். பள்ளி முடிந்து குறுக்குப் பாதையில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த போது யாரோ அவரை கத்தியால் குத்தி கொன்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இது குறித்து ஜெஷ்மாவின் தாய் கூறுகையில், மாலை வரை அவள் வீடு திரும்பாததால் செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தகவல்கொடுத்தேன். ஆனால் அவளிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை.
மாலை 6 மணி வரையிலும் ஜெஷ்மா வராததால் அவளது தோழிகளிடம் விசாரித்தேன். ஆனால் யாருக்கும் ஜெஷ்மா எங்குபோனாள் என்ற விவரம் தெரியவில்லை. இரவு 10 மணிக்கு போலீஸுக்கு தகவல் கொடுத்தோம்.
வீட்டில் அவளுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. ரொம்ப சந்தோஷமாக இருந்தாள். விடுமுறையை தனது சிநேகிதிகளுடன்ஒரு குட்டித் தீவில் கழிக்க திட்டமிட்டிருந்தாள்
அழகான எங்கள் மகளை ஒரு தீயவவன் எங்களிடமிருந்த பறித்துக் கொண்டான் என்றார்.
இந்த மர்மக் கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications