ஜெ.வின் மனுவைத் தள்ளுபடி செய்ய அரசு வக்கீல் கோரிக்கை
பெங்களூர்:
சொத்துக் குவிப்பு வழக்கையும், லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றகோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வாதிட்டார்.
இன்று மீண்டும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி பச்சாப்பூரே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போதுஅரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வாதிடுகையில், வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில்தான் மனுதாரர் இந்தக் கோரிக்கையைமுன்வைத்துள்ளார். இரு வழக்கையும் சேர்த்து விசாரிக்க முயன்றால் அது உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின்உத்தரவுகளை மீறுவதாக அமையும்.
மேலும், ஏற்கனவே தாமதமடைந்துள்ள இந்த வழக்கின் ஓட்டத்தையும் அது பாதிப்பதாக அமையும்.
இரு வழக்குகளும் தனித்தனியானவை என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்த வழக்குகள் தனித் தனியாகவே விசாரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான மனுதாரரின்வழக்கறிஞர் ஜோதி கூறிய கருத்துக்கள் ஏற்புடையவை அல்ல.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான புகார்களும்,லண்டன் ஹோட்டல் வழக்கில் சுமத்தப்பட்டுள்ள தினகரனஅ உள்ளிட்டோர் மீதான புகார்களும் வேறு வேறானவை. இதைஇணைப்பதற்கு உரிய காரணங்கள் இல்லை.
சொத்துக் குவிப்பு வழக்கில், விசாரணை குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. 259 அரசுத் தரப்பு சாட்சிகள்விசாரிக்கப்பட்டு விட்டனர். 87 குறுக்கு விசாரணைகள் நடந்து முடிந்துள்ளன. எனவே இப்போது இந்த வழக்கை இணைத்து,மீண்டும் விசாரிப்பது என்பது வழக்கை தாமதப்படுத்தும்.
மேலும்,. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஹோட்டல் வழக்கில்சேர்க்கப்படவில்லை. அப்படி இருக்கையில் எப்படி இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க முடியும்?
இரு வழக்குகளிலும் அரசுத் தரப்பில் உரிய முறையில்தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவியல்நடைமுறைச் சட்டத்தை மீறியதாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர் கூறுவதில் சற்றும் உண்மையில்லை என்றார் ஆச்சார்யா.
தொடர்ந்து ஜோதி வாதிடுகையில், அரசு வழக்கறிஞர் சில விஷயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு வாதிட்டுள்ளார். அனைத்துவிஷயங்களையும் அவர் கூறவில்லை. நான் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து ஜூன் 4ம் தேதிக்கு நீதிபதி பச்சாப்பூரே ஒத்திவைத்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications