டால்மியாபுரம் சிமென்ட் ஆலை இடிந்து 12 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

டால்மியாபுரம் சிமென்ட் ஆலையின் கட்டடம் இடிந்ததில் 12 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம்அடைந்தனர். பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டம் டால்மியாபுரத்தில் அரசுக்குச் சொந்தமான சிமென்ட் நிறுவனம் உள்ளது. இங்குள்ள ஒருகட்டிடத்தில் புதுப்பிக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. பிற்பகல் 1.15 மணியளவில் அந்தக் கட்டிடத்தின் கூரைதிடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி 12 பேர் பலியானார்கள். 20க்கும் மேற்பட்டோர்படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு தீயணைக்கும் படையினர் மற்றும் போலீஸார் விரைந்து சென்றுமீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+