உதயமானது காரைக்கால் மாவட்டம்
பாண்டிச்சேரி:
புதுவை யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்கால் பிராந்தியம் தனி மாவட்டமாக உதயமாகியுள்ளது.
புதுவை யூனியன் பிரதேசத்தின் கீழ் வரும் காரைக்கால் பகுதி, புதுவை அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும்,மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புதுவை அரசு காரைக்கால் பிராந்தியத்தை நடத்தி வருவதாகவும் சமீப காலமாக குற்றச்சாட்டுஅதிகரித்த வந்தது.
இந்த நிலையில் காரைக்கால் பகுதிக்கென சில சிறப்புத் திட்டங்களைமாநிலமுதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி,காரைக்கால் தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என ரங்கசாமி தெரிவித்திருந்தார்.
அதற்கு முதல்கட்டமாக காரைக்காலை தனி வருவாய் மாவட்டமாக சமீபத்தில் புதுவை அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்துதற்போது காரைக்கால் நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் முதல் ஆட்சித் தலைவராக டாக்டர்சுந்தரவடிவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
சுந்தரவடிவேலு,ஏற்கனவே காரைக்கால் பிராந்திய நிர்வாகியாகப்பொறுப்பு வகித்து வந்தார். பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் கீழ்இருந்த புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகள் இணைந்துதான் புதுவை யூனியன் பிரதேசமாகஅறிவிக்கப்பட்டது. இருப்பினும் புதுவையைச் சேர்ந்தவர்களுக்குத்தான் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் புதுவை அரசுமுக்கியத்துவம் தருவதாக மற்ற பகுதிகளில் நீண்ட காலமாகவே முனுமுனுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications