ஜெ.வைக் குறை கூறவில்லை: சிவராஜ் பாட்டீல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைப் புலிகள் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா உள்பட எந்தத் தலைவரையும், எந்த அரசையும்குறை கூறவோ, குற்றம்சாட்டவோ மத்தியஅரசு முயலவில்லை என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்கூறியுள்ளார்.

மத்திய அரசின் 2004-05ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில், தமிழகத்தில் விடுதலைப் புலிகள் தொடர்ந்துஇயங்கி வருவதாகவும், கடத்தல் போன்றவற்றில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த 22ம் தேதி சிவராஜ் பாட்டீலுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில்,தனது தலைமையிலான அரசுக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாக சிலருடைய தூண்டுதலின் பேரில் இவ்வாறுகூறப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளை ஜெயலலிதா ஒரு காலத்தில் தீவிரமாக ஆதரித்ததாகவும், இப்போதுஅவர்களுக்கு எதிராக பேசுவதாகவும் திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் சிவராஜ் பாட்டீல் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மத்திய அரசின் வருடாந்திர அறிக்கையில், எந்தத் தலைவரையும் அல்லது எந்த அரசையும் குறை கூறி ஒருஅம்சம் கூட இடம் பெறவில்லை. அறிக்கையில் கூறப்பட்டிருந்த விஷயங்களை யாராவது திரித்துக் கூறவோ,புணைந்து கூறவோ முற்பட்டால் அதுகுறித்துத் தாங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதை தாங்கள் ஏற்கவும்தேவையில்லை. சரியான கூற்றுக்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

யாரையும் களங்கப்படுத்த மத்தியஅரசு முயற்சிக்கவில்லை என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.நீங்களும், உங்களது அரசும் இந்த விஷயத்தில் எந்தவிதமான நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள் என்பதை மத்தியஅரசு தெளிவாக அறியும்.

சமீபத்தில் டெல்லியில்நடந்த முதல்வர்கள் மாநாட்டின்போது தாங்கள் கூறிய கருத்துக்கள் பிரதமர் மற்றும் பிறரால்ஏற்றுக் கொள்ளப்பட்டன. தங்களது யோசனைகள் மிகவும் சரியானவை, அமல்படுத்தக் கூடியவை. இந்தயோசனைகளைஅமல்படுத்தும் முயற்சியிலும் மத்தியஅரசு கண்டிப்பாக ஈடுபடும் என்று பாட்டீல் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+